200 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஹெராயின் போதை மருந்தை பஞ்சாபில் கைபற்றிய BSF !!

  • Tamil Defense
  • December 28, 2021
  • Comments Off on 200 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஹெராயின் போதை மருந்தை பஞ்சாபில் கைபற்றிய BSF !!

எல்லை பாதுகாப்பு படையினர் பஞ்சாப் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையோரம் வெவ்வேறு இடங்களில் 200 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஹெராயின் போதை மருந்தை கைபற்றி உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று 101ஆவது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் 34 கிலோ அளவிலான ஹெராயினை மெயின் வாலி உத்தர் எல்லை காவல் சாவடிக்கு அருகே கன்டுபிடித்தனர்.

பின்னர் அன்றே மொஹம்மதி வாலா எல்லை காவல் நிலைக்கு அருகே 116ஆவது பட்டலாயினை சேர்ந்த வீரர்கள் 6 கிலோ அளவிலான ஹெராயினை கைபற்றினர்.

அதே போல் சனிக்கிழமை அன்று 136 ஆவது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் எல்லையோரம் உள்ள பராகே பகுதியில் ஏறத்தாழ 11 கிலோ அளவிலான ஹெராயினை கண்டுபிடித்ததும் குறிப்பிடத்தக்கது.