இந்திய தரைப்படை பயன்படுத்தி வரும் குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளில் ஒன்று தான் இக்லா-1எம் இதனை தோளில் சுமந்து ஏவலாம்.
தற்போது இந்த இக்லா-1எம் ரக ஏவுகணைகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, இதன் மதிப்பு 471 கோடி ரூபாய் ஆகும்.
அடுத்த பத்து வருடங்களுக்கு இந்த மேம்படுத்தல் பணிகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த ஒப்பந்தத்தை அடுத்து பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு தலா ரூ.426 அளவுக்கு ஏற்றம் கண்டது.