பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது இந்திய விமானப்படையின் 2400 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது.
அதாவது இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் இலகுரக தேஜாஸ் போர் விமானங்களுக்கான 20 வெவ்வேறு வகையான அதிநவீன தொழில்நுட்ப அமைப்புகளை தயாரித்து வழங்க வேண்டும்.
2023ஆம் ஆண்டு முதலாக 2028ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலகட்டத்தில் இவற்றை தயாரித்து வழங்க பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் HAL ஒப்பந்தம் செய்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முதல் முறையாக ஒரு இந்திய நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய ஒப்பந்தம் வழங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
ஒப்பந்த கோப்புகள் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தேஜாஸ் பிரிவின் பொது மேலாளர் ஜெயதேவா அவர்களால் பெல் நிறுவனத்தின் பொது மேலாளர் மனோஜ் ஜெயினிடம் வழங்கப்பட்டது.