
மேற்கு அஸ்ஸாம் மற்றும் வடக்கு வங்காளம் பகுதிகளில் இயங்கி வந்த கம்தாபூர் விடுதலை இயக்கம் எனும் பயங்கரவாத அமைப்பு இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.
முன்னர் உல்ஃபா அமைப்புடன் இணைந்து செயல்பட்ட இந்த அமைப்பானது கோச் ராஜ் போங்கஷி சமுகத்திற்கென ஒரு தனி மாநிலம் கேட்டு போராடி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெஹார், டார்ஜிலிங், ஜல்பைகுரி, மால்டா, வடக்கு மற்றும் தெற்கு தினாஜ்பூர் ஆகிய 6 மாவட்டங்கள்
மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார், போங்கைகான், துப்ரி மற்றும் கோல்பாரா ஆகிய நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து கம்தாபூர் எனும் புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை ஆகும்.
இந்த 29 வருட நீண்ட நெடிய பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தைகளில் தங்களது குழுவும் கலந்து கொள்வதறக்கு விரும்புவதாகவும் ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதை விரும்பவில்லை எனவும் குற்றம்சாட்டி உள்ளது.