
வெளியுறவு துறை செயலாளர் திரு. ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்க்லா வங்கதேசம் இந்தியாவிடம் இருந்து சுமார் 500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை இறக்குமதி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசும் போது வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகியவை வரலாறு ,மொழி ,ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் என பல்வேறு வகைகளில் இணைப்பை கொண்டுள்ளதாகவும்
வங்கதேசம் சென்றுள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பயணத்தின் போது வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா இதுபற்றி விவாதித்ததாகவும் கூறினார்.