1 min read
அமெரிக்க தனியார் ராணுவத்தின் உதவியை நாடிய ஆஃப்கன் தாலிபான் எதிர்ப்பு தலைவர் !!
ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களை தொடர்ந்து பாஞ்ச்ஷீர் மாகாணத்தின் அஹமது மஹ்சூத் தனது ஆதரவாளர்களுடன் எதிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஈரானிய செய்தி தாளான டெஹ்ரான் டைம்ஸ் அஹமது மஹ்சூத் அமெரிக்க தனியார் ராணுவ நிறுவனமான ப்ளாக் வாட்டர் நிறுவனத்தின் நிறுவனர் எரிக் ப்ரின்ஸை சந்தித்ததாக செய்தி வெளியிட்டு உள்ளது.
ப்ளாக் வாட்டர் நிறுவனம் தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த தனியார் நிறுவனமாகும், ஈராக் மற்றும் ஆஃப்கன் போரில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
ப்ளாக் வாட்டர் நிறுவனம் ஒய்வு பெற்ற அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படை வீரர்களை தேர்வு செய்து பணிக்கு அமர்த்துவது கூடுதல் தகவல் ஆகும்