உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதை தடுக்கும் நான்கு வழிகள் ஒரு முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரியின் பார்வை !!

  • Tamil Defense
  • December 27, 2021
  • Comments Off on உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதை தடுக்கும் நான்கு வழிகள் ஒரு முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரியின் பார்வை !!

தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான எல்லையோரம் உலகின் மிகவும் பதட்டமான எல்லைகளில் ஒன்றாக உள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை எல்லையோரம் குவித்துள்ளன.

ரஷ்யா நேட்டோ படைகள் மற்றும் அமெரிக்க தளவாடங்கள் உக்ரைனில் குவிந்துள்ளதால் தங்களுக்கு எதிரான நடவடிக்கையை தடுக்க படைகளை குவித்துள்ளதாக கூறி வருகிறது.

உக்ரைன் அரசோ ரஷ்யா தங்களது நாட்டின் மீது படையெடுக்க உள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அத்தகைய நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் படைகளை குவித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஒரு முன்னாள் மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரி ரஷ்யா உக்ரைன் மீது படலயெடுக்காமல் தடுக்க நான்கு வழிகளை அமெரிக்கா கையாள வேண்டும் என கூறி உள்ளார்.

முதலாவது உளவு மற்றும் மூலோபாய தகவல் தொடர்பு அதாவது அனைத்து வகையான உளவு தகவல்களையும் திரட்டி ரஷ்யாவின் திட்டங்களை உலக அரங்கில் வெளிபடுத்துவது.

இரண்டாவது சைபர் போர் முறை ரஷ்ய தாக்குதல் படையின் கட்டளை மற்றும் கட்டுபாட்டை ஊடுருவுவது மேலும் இதனை அமெரிக்கா செய்யும் என ரஷ்யாவுக்கு உணர்த்துவது.

மூன்றாவது பொருளாதார ரீதியாக ரஷ்ய நிறுவனங்கள் அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோர் மீதான நடவடிக்கைகளை தொடங்குவது.

நான்காவது மேற்குறிப்பிட்ட எதுவுமே பலனளிக்காத பட்சத்தில் ஈரானை உலக பொருளாதார சங்கிலியில் இருந்து நீக்கி அந்நாட்டு பொருளாதாரத்தை நாசம் செய்தது போல ரஷ்யா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் கடைசி ஆயுதம்.

ரஷ்யா கடந்த பல ஆண்டுகளாக முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் பலவற்றை தொடர்ந்து சீண்டி வருவதாகவும் இரண்டு நாடுகள் மீது படையெடுத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.