அமெரிக்க ராணுவ தளவாடங்கள் எல்லையை நெருங்குவதாக ரஷ்யா குற்றச்சாட்டு !!

  • Tamil Defense
  • December 12, 2021
  • Comments Off on அமெரிக்க ராணுவ தளவாடங்கள் எல்லையை நெருங்குவதாக ரஷ்யா குற்றச்சாட்டு !!

சமீபத்தில் க்ரிஸ் நாட்டு ஊடகம் ஒன்றிற்கு ரஷ்ய அதிபர் ம்ளிகையான க்ரெம்ளினுடைய செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் பேட்டியளித்தார்.

அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமேதும் இல்லை என்றார் ஆனால் சில நாட்கள் முன்னர் அமெரிக்க உளவுத்துறை இத்தகைய குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது ரஷ்யா அமெரிக்க ராணுவ தளவாடங்கள் உக்ரைன் ரஷ்ய எல்லை பகுதிகளை நோக்கி நகர்வதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது இதனால் ரஷ்யா அமெரிக்கா இடையே நேரடி பனிப்போர் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ரஷ்யா அமெரிக்க ராணுவ தளவாடங்கள் உக்ரைனில் இருப்பதால் தான் முன்னெச்சரிக்கையாக படைகளை எல்லையோரம் குவித்து உள்ளதாகவும்,

தங்கள் நாட்டு படைகளை தங்களது எல்லைகளுக்கு உள்ளே தான் நகர்த்தி உள்ளதாகவும் அதற்கு அனைத்து விதமான உரிமைகளும் உள்ளதாக கூறியுள்ளார்.