இந்தியா பயங்கரவாதத்தை மிக சிறப்பாக ஒடுக்கி வருவதாக அமெரிக்கா பாராட்டு !!

  • Tamil Defense
  • December 19, 2021
  • Comments Off on இந்தியா பயங்கரவாதத்தை மிக சிறப்பாக ஒடுக்கி வருவதாக அமெரிக்கா பாராட்டு !!

இந்தியா பயங்கரவாதத்தை மிக சிறப்பாக ஒடுக்கி வருவதாக அமெரிக்கா தனது வருடாந்திர பயங்கரவாத செயல்பாடு குறித்த அறிக்கையில் பாராட்டு தெரிவித்துள்ளது.

குறிப்பாக தேசிய புலனாய்வு முகமையானது சர்வதேச மற்றும் உள்நாட்டு அளவிலான பயங்கரவாத செயல்பாடுகளை வெற்றிகரமாக கண்காணித்து தடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2309ஐ நடைமுறைப்படுத்த இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றி வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆந்தனி ப்ளிங்கென் கூறியுள்ளார்.

இந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2309 பொது மக்கள் மிகவும் பாதுகாப்பாக வான்வழி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்வதற்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மற்றும் மாநில அளவிலான இந்திய பயங்கரவாத ஒழிப்பு அமைப்புகள் மிகவும் சிறப்பாக செயல்படுவதாகவும்

தேசிய புலனாய்வு முகமை 34 வழக்குகளில் 150 ISIS மற்றும் 10 அல் காய்தா உறுப்பினர்களை கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.