இந்தியாவின் துப்பாக்கி தயாரிப்பு மையமாக உருவெடுக்கும் அமேதி நகரம் !!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உத்தர பிரதேச மாநிலம் அமேதி நகரம் சண்டை துப்பாக்கி தயாரிக்கும் மையமாக உருவெடுக்க உள்ளது.

நியுஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கலாஷ்னிகோவ் குழுமத்தின் செய்தி தொடர்பாளர் மரியா வோரோபியேவா AK-203 வரலாற்று சிறப்புமிக்க AK-47 துப்பாக்கியை விட சிறப்பானதாக இருக்கும் என கூறினார்.

AK-203 ரக துப்பாக்கிகள் உலகின் முன்னனி துப்பாக்கிகளுக்கு இணையானது இதனால் 7.62 மில்லிமீட்டர் ரக தோட்டாக்களை சுட கூடியது.

மேலும் இந்த துப்பாக்கியில் பல்வேறு வகையான சென்சார்கள் லேசர், பார்வை கருவிகள், கால்லிமேட்டர் போன்ற பல்வேறு வகையான அதிநவீன கருவிகளை பொருத்தி பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உடைய தற்போதைய சுற்று பயணத்தின் போது கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.