புதினின் இந்திய வருகையின் போது ஏகே-203 துப்பாக்கி ஒப்பந்தம்

  • Tamil Defense
  • December 2, 2021
  • Comments Off on புதினின் இந்திய வருகையின் போது ஏகே-203 துப்பாக்கி ஒப்பந்தம்

இந்திய- இரஷ்ய பாதுகாப்பு தொடர்பான உறவை வலுப்படுத்தும் பொருட்டு புதினின் இந்திய வருகையின் போது, அதாவது வரும் திங்கள் அன்று 7.5 லட்சம் ஏகே-203 துப்பாக்கிகள் வழங்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளன.

பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியின் ஒப்புதல் முதல் அனைத்தும் தற்போது தயாராக உள்ளது.புதின் இந்தியா வந்த உடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

சுமார் 5000 கோடிகள் செலவில் இந்த துப்பாக்கிகள் பெறப்பட உள்ளன.முதல் தொகுதி 70000 துப்பாக்கிகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு பின்பு உள்ள துப்பாக்கிகள் தொழில்நுட்ப பறிமாற்றம் பெற்று இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அமேதியில் தயாரிக்கப்படும்.

ஒப்பந்தம் கையெழுத்தான 32 மாதத்திற்கு பிறகு துப்பாக்கிகள் டெலிவரி தொடங்கப்படும்.