இந்திய முப்படைகளில் 9362 அதிகாரிகள் உட்பட 1 லட்சம் பணியிடங்கள் காலி பாதுகாப்பு அமைச்சகம் !!

  • Tamil Defense
  • December 14, 2021
  • Comments Off on இந்திய முப்படைகளில் 9362 அதிகாரிகள் உட்பட 1 லட்சம் பணியிடங்கள் காலி பாதுகாப்பு அமைச்சகம் !!

இந்தியாவின் முப்படைகளிலும் சுமார் 9,362 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் 1 லட்சத்து 13 ஆயிரம் இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இந்த தகவலை பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும் போது தெரிவித்தார்.

அதன்படி தரைப்படையில் 7476 அதிகாரிகள் பணியிடங்களும் 97,177 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் பணியிடங்களும் 4850 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இந்திய கடற்படையில் 1265 அதிகாரிகள் பணியிடங்களும் 11,166 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளது என தெரிகிறது.

தற்போது தரைப்படையில் 53,569 அதிகாரிகள் 11,35,799 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியாற்றி வருவதாகவும்

இந்திய கடற்படையில் 11,100 அதிகாரிகளும் 63,515 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியாற்றி வருவதாகவும்

இந்திய விமானப்படையில் 12,048 அதிகாரிகள் மற்றும் 1,38,792 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியாற்றி வருவதாகவும்

காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்ப முறைப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் திரு. அஜய் பாட் தெரிவித்தார்.