
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும் போது கீழ்க்கண்ட தகவல்களை தெரிவித்தார்.
அதாவது கடந்த 2019, நவம்பர் 30 முதல் இந்த வருடம் நவம்பர் 29 வரையிலான இரண்டு ஆண்டு காலகட்டத்தில் சுமார் 5601 அத்துமீறல் சம்பவங்கள் பாக் படைகளால் நடைபெற்று இருப்பதாகவும்,
இந்திய படையினருக்கு இவற்றை எதிர்கொள்ள முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடியை கொடுத்து பொருள் மற்றும் உயிர் சேதம் ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர் துப்பாக்கி குண்டுகள், பிரங்கிகள், வான் பாதுகாப்பு துப்பாக்கிகள், போர் கப்பல்கள் ஆகியவற்றை தயாரிக்க 194 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.