557 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்கப்பட்டது !!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்திய தரைப்படை தனது 557
பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பணி நிரந்தர உத்தரவு சான்றிதழை வழங்கியுள்ளது.

இது பற்றி மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் இதில் எவ்வித தாமதமும் இருக்காது என்றார்

மேலும் பணி நிரந்தரம் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடிய 72 பெண் அதிகாரிகளில் 63 தகுதி வாய்ந்த பெண் அதிகாரிகள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது வரை மருத்துவம், நீதி மற்றும் கல்வி படைப்பிரிவுகளில் மட்டுமே பெண் அதிகாரிகளுக்கு பணி நிரந்தரம் இருந்த நிலையில்

தற்போது புதிதாக பொறியியல், தகவல் தொடர்பு, வான் பாதுகாப்பு, வானூர்தி பிரிவு,மின்னனு மற்றும் இயந்திரவியல், சேவைகள், ஆயுதங்கள் மற்றும் உளவு ஆகிய படையணிகளில் இது கடைப்பிடிக்கப்பட உள்ளது.

13 லட்சம் பேர் கொண்ட படையில் 43,000 அதிகாரி பணியிடங்கள் உண்டு அதில் 1650 பெண் அதிகாரிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.