மணிப்பூரில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கைப்பற்றிய அஸ்ஸாம் ரைபிள்ஸ்

  • Tamil Defense
  • December 8, 2021
  • Comments Off on மணிப்பூரில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கைப்பற்றிய அஸ்ஸாம் ரைபிள்ஸ்

அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் மணிப்பூர் காவல்துறை வீரர்கள் இணைந்து நடத்திய ஆபரேசனில் 500 கோடிகள் ரூபாய் அளவிலான போதை பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மணிப்பூரில் உள்ள மோரே நகரத்தில் நகரத்தில் உளவுத் தகவல்களின் அடிப்படையில் மணிப்பூர் காவல்துறை மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த போதை பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்த மதிப்பு 500 கோடிகள் என கணக்கிடப்பட்டுள்ளன.54கிகி பிரௌன் சுகர் மற்றும் 154கிகி மெதம்பெடமைன் எனும் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இதனுடன் தொடர்புடைய மியான்மரை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு படைகள் கைது செய்துள்ளன.