கராச்சி துறைமுகத்தை 1971 போரில் நாசம் செய்த படையணிக்கு இன்று ஜனாதிபதி அங்கீகாரம் !!

  • Tamil Defense
  • December 6, 2021
  • Comments Off on கராச்சி துறைமுகத்தை 1971 போரில் நாசம் செய்த படையணிக்கு இன்று ஜனாதிபதி அங்கீகாரம் !!

கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலை போரின் போது இந்திய கடற்படையின் 22ஆவது ஏவுகணை கலன் படையணி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை சர்வநாசம் செய்தது.

போர் நடைபெற்று 50 ஆண்டுகள் ஆன நிலையில் கில்லர்ஸ் என அழைக்கப்படும் அந்த படையனியும் தனது 50ஆவது ஆண்டை இந்த வருடம் கொண்டாடுகிறது.

ஆகவே இன்று மும்பையில் நடைபெற உள்ள விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்த படையணிக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்க உள்ளார்.

இந்த படையணியின் வெற்றி தாக்குதல் நடைபெற்ற நாளை தான் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.