Day: December 24, 2021

மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட குவாசி பலிஸ்டிக் ஏவுகணை பிரலே

December 24, 2021

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) டிசம்பர் 23, 2021 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘பிரலே’ என்ற ஏவுகணையின் இரண்டாவது சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. முதன்முறையாக, தொடர்ந்து இரண்டு நாட்களில் இரண்டு முறை ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஏவுகணை சோதனை அனைத்து பணி நோக்கங்களையும் பூர்த்தி செய்தது. இந்த ஏவுதல் அனைத்து ரேஞ்ச் சென்சார்கள் மற்றும் கருவிகளால் கண்காணிக்கப்பட்டது. பாதுகாப்பு துறை […]

Read More

இரஷ்யாவை விடுத்து மேற்கு நாடுகளிடம் போர்விமானங்கள் வாங்கும் இந்தோனேசியா

December 24, 2021

இந்தோனேசியா ரஷ்ய விமானங்களை வாங்குவதை கைவிட்டு அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் பிரெஞ்சு நாடுகளிடம் இருந்து விமானங்கள் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய போர் விமானங்களை வாங்கும் முயற்சியில் தோல்வியை ஒப்புக்கொண்ட இந்தோனேசியா, இப்போது boring F-15EX Eagle II மற்றும் Dassault Rafale டஸ்ஸால்ட் ரஃபேல் ஆகிய ஏதேனும் ஒரு விமானத்தை தேர்வு செய்யும் என்று நாட்டின் விமானப்படை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிற்கு அருகிலுள்ள ஹலிம் பெர்டனகுசுமா விமான தளத்தில் […]

Read More

இந்தியா பங்கேற்கும் போர் விமான ஒப்பந்தத்தில் வாய்ப்பை இழக்கலாம் என பதிவிட்டு பின்னர் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்த பாக் தூதரகம் !!

December 24, 2021

அர்ஜென்டினா நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அந்நாட்டு உடனான போர் விமான ஒப்பந்தத்தை இழக்க நேரிடலாம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது. பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அந்த தூதரகமும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை அறிக்கை வெளியிட்டன. சீன பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்.-17 போர் விமானத்தை அர்ஜென்டினா நாட்டின் விமானப்படைக்கு பாகிஸ்தான் விற்பனை செய்ய தீவிரமாக முயன்று வருகிறது. தற்போது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்த நிகழ்வால் வெட்கி தலைகுனிந்து உள்ளதும் இதே […]

Read More

இடைத்தூர துல்லிய தாக்குதல் மிதவை குண்டுகளை வாங்க திட்டமிடும் இந்திய ராணுவம் !!

December 24, 2021

இந்திய ராணுவம் மலைகள், காடுகள், சமவெளிகள், பாலைவனம் ஆகிய பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய இடைத்தூர மிதவை குண்டுகளை வாங்க திட்டமிடுகிறது. தற்காலத்தில் உள்ள போர் முறைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இத்தகைய துல்லிய தாக்குதல் மிதவை குண்டுகளை இந்திய ராணுவம் வாங்கி பயன்படுத்த திட்டமிடுகிறது. இவை அடிப்படையில் ஆளில்லா விமானங்களாகும், நிலையான பாதுகாப்பான இலக்குகளை உடனுக்குடன் களத்திலேயே அடையாளம் கண்டு பின்னர் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட வேண்டும் எனவும் இத்தகைய 10 […]

Read More

விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலுக்கு தேவையான அகச்சிவப்பு கதிர் அமைப்பை ஒப்படைத்த NSTL !!

December 24, 2021

கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலில் பொருத்தப்பட உள்ள அகச்சிவப்பு கதிர் அமைப்பை NSTL ஒப்படைத்தது. இந்த NSTL – Naval Science & Technological Laboratory அதாவது கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் என்பதாகும், இது DRDO வின் ஒரு பிரிவாகும். இந்த ஆய்வகம் ஒரு 3 மெகாவாட் திறன் கொண்ட டீசல் என்ஜின் அகச்சிவப்பு கதிர்வீச்சு எதிர்ப்பு அமைப்பை இந்திய கடற்படையிடம் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே […]

Read More

இந்திய வரலாற்றில் முதல் முறையாக விஐபி பாதுகாப்பில் CRPFன் பெண் கமாண்டோக்கள் !!

December 24, 2021

மத்திய ரிசர்வ் காவல்படை வி.ஐ.பி பாதுகாப்பில் ஈடுபடுத்த 32 பேர் அடங்கிய பெண்கள் கமாண்டோ படைப்பிரிவை உருவாக்கி உள்ளது. இது நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாகும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு இவர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். இசட் பிளல் பிரிவில் பாதுகாப்பு பெறுவோறுக்கு இவர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தில்லியில் வசித்து வரும் முக்கிய தலைவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

Read More

விக்ராந்த் கப்பலை பார்வையிட்ட ஜனாதிபதி உள்நாட்டு கப்பல் கட்டுமான திறன்களை பாராட்டினார் !!

December 24, 2021

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொச்சியில் உள்ள எர்ணாகுளம் கால்வாயில் தென்னக கடற்படை நிகழ்த்தி காட்டிய நடவடிக்கைகளை பார்வையிட்டார். இந்த நடவடிக்கைகள் பயிற்சியில் இந்திய கடற்படையினர் போரின் போது போர் கப்பல்கள் இயங்கும் முறைகளை நிகழ்த்தி காட்டினர். அப்போது ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை பார்வையிட்டார் அவர் விக்ராந்தை பார்வையிடுவது இதுவே முதல் முறையாகும் அப்போது படையில் இணைக்கும் விஷயங்கள் அவருக்கு விளக்கப்பட்டது. இது குறித்து பிதிவிட்ட அவர் உள்நாட்டு கப்பல் கட்டுமான திறன்களை நோக்கிய இந்திய […]

Read More

2035ஆம் ஆண்டு வாக்கில் 6 விமானந்தாங்கி கப்பல்களை படையில் இணைத்து உலகை ஆட்டி படைக்க நினைக்கும் சீனா !!

December 24, 2021

2035ஆம் ஆண்டு வாக்கில் சீனா 6 விமானந்தாங்கி கப்பல்களை படையில் இணைக்க விரும்புகிறது அவற்றில் குறைந்தபட்சம் நான்கு அணுசக்தியால் இயங்குபவையாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது உலகில் மிக வலிமையான இடத்தில் அமெரிக்கா உள்ளது 19 விமானந்தாங்கி கப்பல்களுடன் உலகளாவிய ரீதியில் கடல்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது இதற்கு சீனா போட்டியாக உருவெடுக்க விரும்புகிறது. தற்போது சீனா தனது மூன்றாவது விமானந்தாங்கி கப்பலை (டைப்-003) கட்டி வருகிறது இது சுமார் 80,000 டன்கள் எடையுடன் டீசல் என்ஜினால் […]

Read More

S500 அமைப்பை பெற உள்ள முதல் வெளிநாட்டு கஸ்டமர் இந்தியாவா ??

December 24, 2021

இந்தியா எஸ்-500 ப்ரோமித்தியஸ் வான் பாதுகாப்பு அமைப்பை பெறும் முதலாவது வெளிநாட்டு கஸ்டமராக இருக்கலாம் என ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு தற்போது இந்தியா முதலாவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை பஞ்சாபில் செயல்படுத்தி உள்ள நிலையில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்-500 ப்ரோமித்தியஸ் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கும் எஸ்-400 அமைப்பானது 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தான் தாக்கும். மேலும் எஸ்-500 ப்ரோமித்தியஸ் […]

Read More

2021: பாதுகாப்பு துறையின் ஏற்ற தாழ்வுகள் வருங்கால திட்டங்கள் !!

December 24, 2021

2021ஆம் ஆண்டு முடிவை நெருங்கி கொண்டு இருக்கிறது தற்போது இந்த வருடத்தில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகள் சவால்கள் பற்றி காணலாம். சீனா உடனான எல்லையோரம் தொடர்ந்து பதட்டமாகவே உள்ளது படையினர் தொடர்ந்து பனிகாலத்திலும் எல்லையோரம் பணியாற்றி வருகின்றனர். காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள காட்டில் ஒரு மாத காலம் பயங்கரவாதிகளுடன் தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்தது, இந்த ஆபரேஷனில் 9 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு விமானப்படை தளத்தில் ட்ரோன்கள் மூலமாக குண்டுவீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் […]

Read More