Day: December 22, 2021

காஷ்மீரில் இரு இடங்களில் தொடர் பயங்கரவாத தாக்குதல்- வீரர் வீரமரணம்

December 22, 2021

காஷ்மீரில் 30 நிமிட இடைவேளையில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு காவல் துறை வீரர் மற்றும் பொதுமக்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.ஸ்ரீநகரின் மெர்ஜான்போர் பகுதியில் நடைபெற்ற முதல் தாக்குதலில் ஒரு சிவிலியன் உயிரிழந்தார். ரூப் அகமது என்பவர் மீது பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் படுகாயமுற்ற அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். அனந்தநாக்கில் காவல் நிலையம் அருகே நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் காவல்துறை வீரரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் படுகாயமுற்ற அவர் பின்பு […]

Read More

தொடர் ஏவுகணை சோதனையில் டிஆர்டிஓ-இதுவரை சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள் லிஸ்ட்

December 22, 2021

ஜனவரி 25 – ஆகாஷ்- NG இந்த வருடம் முதல் மாதமான ஜனவரி 25ல் டிஆர்டிஓ ஆகாஷ் அடுத்த தலைமுறை ஏவுகணையை சோதனை செய்தது. குறைந்த Radar cross section கொண்ட வளைந்து நெளிந்து செல்லக்கூடிய இலக்கை அழிக்க இந்த ஏவுகணை விமானப்படைக்கு உதவும். துருவாஸ்திரா/ ஹெலினா இந்த வருடம் பிப்ரவரி மாதம் இராணுவத்திற்கான ஹெலினா டேங்க் எதிர்ப்பு ஏவுகணையும், விமானப்படைக்கான துருவாஸ்திரா ஏவுகணையும் பாலைவனப்பகுதியில் சோதனை செய்யப்பட்டது. VL- SRSAM இந்த வருடம் பிப்ரவரி மாதம் […]

Read More

காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்த புதிய பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கும் பாகிஸ்தான் !!

December 22, 2021

காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் தினந்தோறும் மாறி வரும் பாகிஸ்தானுடைய திட்டமிடல்களின் ஒரு பகுதியாக தற்போது பாகிஸ்தான் புதிய பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி வருகிறது. ஜெய்ஷ் இ மொஹம்மது மற்றும் லஷ்கர் இ தொய்பா போன்ற புதிய பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி உள்ளன அவற்றில் ஒரு அமைப்பு பிரத்யேகமாக கல்வீச்சுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. தெஹ்ரிக் இ சாங்பாஸ் எனும் அமைப்பு ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த அமைப்பில் அனைவரும் கல்வீச்சாளர்கள் ஆவர். காஷ்மீர் டைகர்ஸ், யுனைடெட் […]

Read More

எல்லை கட்டுபாட்டு கோடு அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் பாக் படையினர்; எதிர்ப்பு தெரிவித்த இந்தியா !!

December 22, 2021

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள டித்வால் செக்டாரில் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதை அறிந்த இந்திய படையினர் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அந்த சந்தேகத்துக்கு இடமான கட்டுமான பணிகளை நிறுத்துமாறு ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவிப்பு விடுத்தனர். ஒரு மூத்த அதிகாரி கூறும்போது தற்போது பாகிஸ்தான் படைகள் தாங்கள் மேற்கொண்டு வந்த கட்டுமான பணிகளை நிறுத்தி கொண்டதாகவும் மேலும் இந்த பணி நமது பக்கத்தில் இருந்து வெறுமனே 500 […]

Read More

இரண்டு ஆண்டுகளில் 5601 எல்லை அத்துமீறல் சம்பவங்கள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் !!

December 22, 2021

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும் போது கீழ்க்கண்ட தகவல்களை தெரிவித்தார். அதாவது கடந்த 2019, நவம்பர் 30 முதல் இந்த வருடம் நவம்பர் 29 வரையிலான இரண்டு ஆண்டு காலகட்டத்தில் சுமார் 5601 அத்துமீறல் சம்பவங்கள் பாக் படைகளால் நடைபெற்று இருப்பதாகவும், இந்திய படையினருக்கு இவற்றை எதிர்கொள்ள முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடியை கொடுத்து பொருள் மற்றும் உயிர் சேதம் ஏற்படுத்தியதாகவும் கூறினார். […]

Read More

மேம்படுத்தப்பட்ட பாபர் 1-பி க்ரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த பாகிஸ்தான் !!

December 22, 2021

பாகிஸ்தான் ஏற்கனவே படையில் இணைத்த க்ரூஸ் ஏவுகணை தான் பாபர் தற்போது இந்த க்ரூஸ் ஏவுகணையை மேம்படுத்தி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. முன்னர் வெறுமனே 450 கிலோமீட்டர் தூரம் மட்டுமே செல்லும் திறன் கொண்டிருந்த இந்த ஏவுகணை தற்போது 900 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறனை பெற்றுள்ளது. இந்த சோதனையை மூத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் விஞ்ஞானிகள் ஆகியோர் நேரில் கண்காணித்தனர் மேலும் பிரதமர் அதிபர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Read More

சீனாவுக்கு சட்டவிரோதமாக ஏவுகணை சப்ளை செய்த நிறுவனங்கள் மீது இஸ்ரேலிய அரசு அதிரடி நடவடிக்கை !!

December 22, 2021

சீனாவுக்கு சட்டவிரோதமாக க்ரூஸ் ஏவுகணைகளை சப்ளை செய்த இஸ்ரேலிய நிறுவனங்கள் மற்றும் அதற்கு உதவிய தனி நபர்கள் மீது இஸ்ரேலிய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இஸ்ரேலிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில் மூன்று நிறுவனங்கள் மற்றும் ஏழு தனி நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சட்டவிரோத ஒப்பந்தம் நடைபெற காரணமாக இருந்த நபர் எஃப்ராயிம் மனாஷே எனும் ட்ரோன் நிறுவன அதிபர் ஆவார் இரண்டு வருடங்கள் முன்னர் […]

Read More

மிக்21 போர் விமானத்திற்கு தேஜாஸ் மாற்று அல்ல பாதுகாப்பு அமைச்சகம் !!

December 22, 2021

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகுரக போர் விமானம் ஏற்கனவே படையில் உள்ள மிக்-21 போர் விமானத்திற்கு மாற்று அல்ல என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் தேஜாஸ் போர் விமானங்கள் விமானப்படையை நவீனப்படுத்தும் நோக்கில் சேர்க்கப்படுவதாக கூறினார். கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை டெலிவிரி செய்யப்பட்ட 24 தேஜாஸ் போர் விமானங்களை தயாரிக்க சுமார் 6,653 கோடி ருபாய் செலவாகி […]

Read More

உள்நாட்டிலேயே தயாரான புதிய டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளை பெறும் இந்திய ராணுவம் !!

December 22, 2021

இந்திய தரைப்படை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய அதிநவீன டாங்கி எதிர்ப்பு எதிர்ப்பு கண்ணிவெடியை பெற உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையோரங்களில் அந்நாட்டு படைகள் அத்துமீறினால் அதனை தடுக்கும் வகையில் முதலாவது பாதுகாப்பு அரணாக இவை செயல்படும் என்றால் மிகையாகாது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள இந்த கண்ணிவெடிகள் இந்திய தரைப்படையின் பொறியாளர்கள் படைப்பிரிவில் இணைக்கப்பட உள்ளன. வைபவ் மற்றும் விஷால் என பெயரிப்பட்டுள்ள இந்த அடுத்த தலைமுறை டாங்கி எதிர்ப்பு […]

Read More

7 லட்சம் இந்திய தயாரிப்பு கண்ணிவெடிகளை பெறும் இந்திய தரைப்படை !!

December 22, 2021

இந்திய தரைப்படை முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட வீரர்கள் எதிர்ப்பு கண்ணிவெடியை படையில் இணைக்க உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்து தயாரித்த நிபுன், உல்கா மற்றும் பார்த் ஆகிய அடுத்த தலைமுறை அதிநவீன கண்ணிவெடிகள் தான் இவை. ஏற்கனவே நமது படைகளால் பயன்படுத்தி வரப்படும் M14 டோபாப்பர், M16 ஜம்பிங் ஜாக் மற்றும் M18 க்ளேமோர் ஆகிய வெளிநாட்டு கண்ணிவெடிகளுக்கு இவை மாற்று என கூறப்படுகிறது.

Read More