Day: December 19, 2021

ஸ்ரீநகரில் தொடங்கியது என்கௌன்டர்; பாதுகாப்பு படைகள் அதிரடி

December 19, 2021

ஸ்ரீநகரின் ஹர்வான் பகுதியில் தற்போது என்கௌன்டர் தொடங்கியுள்ளது.இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது உளவுத் தகவல்கள் அடிப்படையில் இந்த சண்டை தொடங்கியுள்ளது.உளவுத் தகவல் அடிப்படையில் ஹர்வான் எனும் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளது பாதுகாப்பு படைகள். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.சமீப காலமாக ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு படைகள் பல ஆபரேசன்களை நடத்தி வருகின்றன.

Read More

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி வளர்ச்சி.

December 19, 2021

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து பாதுகாப்பு விற்பனை எவ்வளவு அதிகரித்துள்ளது? வளர்ச்சிக்கு பங்களித்த காரணிகள் என்ன? இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2016-17ல் ₹1,521 கோடியிலிருந்து 2020-21ல் ₹8,434.84 கோடியாக அதிகரித்துள்ளது. 2018-19ல் இந்த எண்ணிக்கை ₹10,745 கோடியாக இருந்தது. 2025 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சேவைகளில் சுமார் ₹35,000 கோடி ($5 பில்லியன்) ஏற்றுமதியை அடைய அரசாங்கம் லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.

Read More

பாகிஸ்தான் பிரத்யேக அக்னி பிரைம் வெற்றிரமாக சோதனை முக்கியத் தகவல்கள்

December 19, 2021

அணு ஆயுத திறன் கொண்ட புதிய தலைமுறை ஏவுகணை அக்னி-பி இரண்டாவது முறையாக சோதிக்கப்பட்டது. முதல் டெஸ்ட் கடந்த ஜூன் மாதம் நடந்தது. புதிய தலைமுறை அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஏவுகணை அக்னி-பி ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து சனிக்கிழமை காலை 11.06 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது. ஏவுகணையின் இரண்டாவது சோதனை இதுவாகும்.முதல் டெஸ்ட் கடந்த […]

Read More

மேலதிக ரஃபேல் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் வழங்க ஃபிரான்ஸ் தயார் !!

December 19, 2021

ஃபிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளாரன்ஸ் பார்லி நேற்று இந்தியாவிற்கு மேலதிக ரஃபேல் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டதின் கீழ் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் பேசும் போது விரைவில் படையில் இணைய உள்ள இரண்டாவது விமானந்தாங்கி கப்பலுக்கான தேவைகளையும் சேர்த்துஇந்தியாவின் போர் விமான தேவைகளை நிறைவேற்ற ஃபிரான்ஸ் உதவும் எனவும் கூறினார். குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஃபிரான்ஸ் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் சமீப காலமாக படையில் […]

Read More

23 விமானப்படை தளங்களில் அதிநவீன ஸ்மார்ட் வேலி அமைப்பு !!

December 19, 2021

2016ஆம் ஆண்டு நடைபெற்ற பதான்கோட் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலுக்கு பிறகு மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. குறிப்பாக 23 முன்னனி விமானப்படை தளங்களில் Integrated Perimeter Security System (IPSS) எனும் அதிநவீன ஒருங்கிணைந்த ஸ்மார்ட் வேலி அமைப்பு அமைக்கப்பட உள்ளது. இந்த தகவலை பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் மக்களவையில் கேட்டகப்பட்ட கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஃபெப்ரவரி மாதத்தில் […]

Read More

132 கிலோமீட்டர் நீளத்திற்கு முதல்கட்டமாக அமைக்கப்பட்ட அதிநவீன எல்லையோர வேலி !!

December 19, 2021

கடந்த 2019ஆம் ஆண்டு சுமார் 132 கிலோமீட்டர் நீளத்திற்கு அதிநவீனமான எல்லை வேலிகள் இரண்டு பகுதிளில் அமைக்கப்பட்டு உள்ளன. பைலட் அடிப்படையில் வங்கதேச எல்லையோரம் 61 கிலோமீட்டர் தொலைவுக்கும், பாகிஸ்தான் எல்லையோரம் 71 கிலோமீட்டர் தொலைவுக்கும் இவை அமைக்கப்பட்டு உள்ளன. CIBMS – Comprehensive Integrated Border Management System எனப்படும் இந்த அமைப்பை இந்த இரண்டு பகுதிகளிலும் அமைக்க சுமார் 1045 கேடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. மத்திய அரசின் அறிக்கையில் இந்த CIBMS அமைப்பானது […]

Read More

காஷ்மீரில் பாதுகாப்பு அமைப்பு பன்மடங்கு வலுவாகி உள்ளது மத்திய அரசு அறிக்கை !!

December 19, 2021

கடந்த ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டிற்கு பிறகு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை கணிசமாக வலுவாகி உள்ளதாகவும் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து உள்ளதாகவும் மத்திய அரசு அறிக்கை கூறுகிறது. இந்த தகவலை மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து வடிவத்தில் அனுப்பிய பதிலில் தெரிவித்தார். காஷ்மீரில் பாதுகாப்பு அமைப்பு வலுவாகி உள்ளதாகவும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் சம்பவங்களும் கணிசமாக குறைந்துள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் ஊடுருவல்களை மிக கடுமையாக குறைத்துள்ள நிலையில் உளவுத்துறையினர் […]

Read More

பாகிஸ்தான் தாலிபான் தலைவர் மீதான ட்ரோன் தாக்குதல் தோல்வி !!

December 19, 2021

பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் எல்லையோரம் பாகிஸ்தானிய தாலிபான்களின் மிக முக்கிய தலைவர் ஒருவரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆளில்லா விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இலக்கான வீட்டில் மோதியும் வெடிக்கவில்லை என பாகிஸ்தான் தாலிபான்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர். தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பின் மூத்த தலைவரான மவுலவி ஃபக்கிர் மொஹம்மது தங்கியிருந்த ஹூஜ்ரா என்ற வீட்டின் மீது தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த ஃபக்கிர் மொஹம்மது ஆஃப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் சிறையில் […]

Read More

66 இந்திய ISIS பயங்கரவாதிகள் உள்ளதாக அமெரிக்க பயங்கரவாத செயல் குறித்த அறிக்கையில் தகவல் !!

December 19, 2021

ISIS பயங்கரவாத அமைப்பில் 66 இந்திய பயங்கரவாதிகள் உள்ளதாக அமெரிக்க அரசின் வருடாந்திர பயங்கரவாத செயல்பாடு குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது நவம்பர் மாதம் வரையிலான கணக்கு எனவும் 2020ஆம் ஆண்டு எந்த பயங்கரவாதிகளும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக அதிகரித்துள்ள இந்திய அமெரிக்க ஒத்துழைப்பு காரணமாக பயங்கரவாதிகளின் பயணங்கள் வெற்றிகரமாக முடக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இந்தியா பயங்கரவாதத்தை மிக சிறப்பாக ஒடுக்கி வருவதாக அமெரிக்கா பாராட்டு !!

December 19, 2021

இந்தியா பயங்கரவாதத்தை மிக சிறப்பாக ஒடுக்கி வருவதாக அமெரிக்கா தனது வருடாந்திர பயங்கரவாத செயல்பாடு குறித்த அறிக்கையில் பாராட்டு தெரிவித்துள்ளது. குறிப்பாக தேசிய புலனாய்வு முகமையானது சர்வதேச மற்றும் உள்நாட்டு அளவிலான பயங்கரவாத செயல்பாடுகளை வெற்றிகரமாக கண்காணித்து தடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2309ஐ நடைமுறைப்படுத்த இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றி வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆந்தனி ப்ளிங்கென் கூறியுள்ளார். இந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் […]

Read More