Day: December 17, 2021

வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட சுதேசி SFDR தொழில்நுட்பம் !!

December 17, 2021

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறையாக SFDR – Solid Fueled Ducted Ramjet தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்தது. இந்த சோதனையின் வெற்றி மூலமாக அமெரிக்காவின் AIM-120D மற்றும் ஃபிரான்ஸ் நாட்டு தயாரிப்பான மிட்டியார் ஏவுகணைகளை போன்ற ஏவுகணைகளை நாமே தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஏற்கனவே உருவாக்கிய அஸ்திரா ஏவுகணையின் மார்க்-2 வடிவத்தில் இந்த SFDR தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன இந்த ஏவுகணை […]

Read More

பராகுடா அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவிற்கு அளிக்க ஃபிரான்ஸ் விருப்பம் !!

December 17, 2021

ஃபிரான்ஸ் நாடு இந்தியாவிற்கு தனது அதிநவீனமான பாரகுடா ரக அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 17-18 ஆகிய தேதிகளில் இந்தியா வரும் ஃபிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளாரன்ஸ் பார்லி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதனை தயாரிக்கும் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ தொழில்நுட்பத்தில் மிகவும் உயரியது அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பமாகும் அத்தகைய தொழில்நுட்பத்தை தந்து இந்தியாவுடனான உறவுகளை அடுத்த […]

Read More

தேஜாஸ் போர் விமானங்களுக்கு 2400 கோடி ரூபாய் மதிப்பில் பொருத்தப்பட உள்ள அதிநவீன அமைப்புகள் !!

December 17, 2021

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது இந்திய விமானப்படையின் 2400 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது. அதாவது இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் இலகுரக தேஜாஸ் போர் விமானங்களுக்கான 20 வெவ்வேறு வகையான அதிநவீன தொழில்நுட்ப அமைப்புகளை தயாரித்து வழங்க வேண்டும். 2023ஆம் ஆண்டு முதலாக 2028ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலகட்டத்தில் இவற்றை தயாரித்து வழங்க பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் HAL ஒப்பந்தம் செய்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் […]

Read More

மூன்று விமானந்தாங்கி கப்பல்கள் அவசியம் என பரிந்துரைத்த பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு !!

December 17, 2021

பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசிற்கு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது அதற்கான அரசின் பதில்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி நாடாளுமன்ற நிலைக்குழுவானது மூன்று விமானந்தாங்கி கப்பல்கள் இந்திய கடற்படைக்கு தேவை என குறிப்பிட்டுள்ளது. அதாவது இரண்டு கப்பல்கள் நாட்டின் இரண்டு புறமும் தேவை அவற்றில் ஒன்று பராமரிப்பு பணிகளுக்காக செல்லும்போது மற்றொரு கப்பல் அந்த இடைவெளியை நிரப்பியாக வேண்டும். மேலும் குளிர்கால ஆடைகள் குண்டு துளைக்காத கவச உடைகள் மற்றும் எல்லையோர சாலை பணிகள் […]

Read More

இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஆயுதம் இறக்குமதி செய்ய உள்ள வங்கதேசம் !!

December 17, 2021

வெளியுறவு துறை செயலாளர் திரு. ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்க்லா வங்கதேசம் இந்தியாவிடம் இருந்து சுமார் 500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை இறக்குமதி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசும் போது வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகியவை வரலாறு ,மொழி ,ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் என பல்வேறு வகைகளில் இணைப்பை கொண்டுள்ளதாகவும் வங்கதேசம் சென்றுள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பயணத்தின் போது வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா இதுபற்றி விவாதித்ததாகவும் கூறினார்.

Read More

இறக்குமதி தடை பட்டியலில் உள்ள தளவாடங்களை இந்தியாவிலேயே கொள்முதல் (சுதேசி) செய்யும் பணிகள் ஆரம்பம் !!

December 17, 2021

சுமார் 216 ராணுவ தளவாடங்களை மத்திய அரசு இறக்குமதி தடை பட்டியலில் சேர்த்துள்ள நிலையில் அத்தகைய தளவாடங்களை தற்போது இந்தியாவிலேயே கொள்முதல் செய்வதற்கான பணிகள் ஆரம்பமாகி உள்ளன. இதற்காக பாதுகாப்பு விவகாரங்கள் துறை தற்போது தரைப்படை கடற்படை விமானப்படை மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு துறையில் அடுத்த மிகப்பெரிய சீர்திருத்தம் இந்திய நிறுவனங்கள் வாயிலாக நடைபெற உள்ளது. அதற்காக பிரதமர் அலுவலக உத்தரவின்படி பாதுகாப்பு விவகாரங்கள் துறை பணியாற்றி […]

Read More

திபெத்தில் அணு வேதியியல் உயிரியியல் போர்முறை பயிற்சிகளை மேற்கொண்ட சீன ராணுவம் !!

December 17, 2021

திபெத்தில் சமீபத்தில் சீன ராணுவம் அணு உயரியியல் வேதியியல் எதிர்ப்பு போர்முறை பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயிற்சியில் கமாண்டோ வீரர்கள், கவச வாகன சண்டை படையணிகள் மற்றும் காலாட்படை வீரர்கள் பங்கு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 24 மணி நேரம் நடைபெற்ற இந்த போர் ஒத்திகை நவம்பர் மாதம் நடைபெற்றுள்ளது ஆனால் அது பற்றிய தகவல் செவ்வாய்கிழமை அன்று தான் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்த பயிற்சியின் போது அணு அல்லது உயரியியல் […]

Read More