1 min read
சட்டீஸ்கரில் சரண் அடைந்த 16 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் !!
சட்டீஸ்கர் மாநிலத்தின் தான்டேவாடா மாவட்டத்தில் 16 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் காவல்துறையினர் முன்பு சரணடைந்து உள்ளனர்.
அம்மாநில காவல்துறையின் மறுவாழ்வு திட்டமான லோன் வர்ராட்டுவின் கீழ் அவர்கள் சரண் அடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இவர்களுக்கு சட்ட விதிகளின்படி மறுவாழ்வு அமைத்து கொடுக்கப்படும்.
சரண் அடைந்த 16 மாவோயிஸ்டுகளில் ஒருவரான ஜோகா குன்ஜம் ஏற்கனவே பல்வேறு தாக்குதல் வழக்குகளில் தொடர்படையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் இதுவரை 475 பேர் சரணடைந்து உள்ளனர் அவர்களில் 119 பேரின் தலைகளுக்கு விலை அறிவிக்கப்பட்டுள்ளதும்,
தான்டேவாடா மாவட்ட காவல்துறை அங்குள்ள கிராமங்களில் சுமார் 1600 நக்சல்களுடையை புகைப்படம் உள்ள சுவரொட்டிகளை ஒட்டி அறிவிப்பு கொடுத்துள்ளது.