
இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை பிரச்சினையை சுமுகமாக தீர்க்கும் நோக்கில் இரண்டு நாடுகளும் ஏற்கனவே 13 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.
இதுவரை இத்தனை சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும் எவ்வித முன்னேற்றமும் இல்லா நிலையில் இந்த மாத இறுதியில் 14ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளை தொடர்ந்து சீன தரப்பு நிராகரித்து வருவதால் இழுபறி நிலையும் தொடர்கிறது. மேலும் பல ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து எல்லையோரம் பணியாற்றி வருகின்றனர்.
சீன தரப்பின் அழைப்பிற்கு காத்திருப்பதாகவும் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.