Day: December 14, 2021

கடல் கொள்ளையர்களை தாக்க இந்திய கடற்படை பயன்படுத்தி வரும் அதிநவீன இஸ்ரேலிய ஆயுதம் !!

December 14, 2021

கடந்த மாதம் இந்திய கடற்படை தனது மிகவும் அதிநவீனமான நாசகாரி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தை படையில் இணைத்து கொண்டது அனைவரும் அறிந்ததே. இந்த ரக கப்பல்களில் ஒரு அதிநவீனமான இஸ்ரேலிய ஆயுதம் ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது இதன் பெயர் SRCG ஆகும் இதனுடன் ஒரு நவீன கேமிராவும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த துப்பாக்கி நிலையான மேடை ஒன்றில் பொருத்தப்பட்ட ரிமோட் முலமாக இயக்கப்படும் துப்பாக்கி ஆகும் இலக்குகளை அடையாளம் அந்த அதிநவீன கேமிரா உதவும். இந்தியாவின் பொதுத்துறை […]

Read More

இந்திய ராணுவ தொழில்நுட்பங்கள் மீது விருப்பம் கூட்டு தயாரிப்பிலும் இந்தோனேசியா ஆர்வம் அதிகரிக்கும் ஏற்றுமதி வாய்ப்பு !!

December 14, 2021

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நாடான இந்தோனேசியா இந்திய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் அவற்றை கொண்டு தனது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் இந்தோனேசியா சென்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பிரபாவோ சுபியந்தோ மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது இது குறித்த விவாதங்கள் நடைபெற்றதாகவும் இரண்டு தரப்பினரும் ஒத்துழைப்பை அதிகபடுத்த பலவிதமான நடவடிக்கைகளை எடுப்பது […]

Read More

சர்வதேச அளவில் ராணுவ தளங்கள் அமைக்க திணறும் சீனா !!

December 14, 2021

சீன ராணுவத்தில் 20 லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர் மேலும் உலகின் மிகப்பெரிய ராணுவமாகவும் சீன ராணுவம் விளங்கினாலும் உள்நாட்டிலேயே தான் பெரும்பாலும் சீன படைகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன ஆகவே சீனா உலகளாவிய ரீதியில் ராணுவ தளங்கள் அமைக்க விரும்புகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவியேற்ற பிறகு சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாகி உள்ளன ஆனாலும் சீனா நினைத்த அளவு வெற்றி பெறாமல் திணறி வருகிறது. தற்போதைய நிலையில் ஜிபூட்டியில் மட்டும் தான் சீனாவின் […]

Read More

இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்-அரசு !!

December 14, 2021

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பாட் இந்திய பெருங்கடல் பகுதியில் சுதந்திரமான கடல்வழி போக்குவரத்து வான் போக்குவரத்து ஆகியவற்றை இந்தியா ஆதரிப்பதாகவும், சுதந்திரமான வெளிப்படையான விதிகளுக்குட்பட்ட நடவடிக்கைள் முலமாக இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது எனவும் கூறினார். இந்திய கடற்படையின் கொல்லைபுறமான இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையின் அதிகரித்து வரும் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி அவர் இப்படி பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் […]

Read More

இந்திய முப்படைகளில் 9362 அதிகாரிகள் உட்பட 1 லட்சம் பணியிடங்கள் காலி பாதுகாப்பு அமைச்சகம் !!

December 14, 2021

இந்தியாவின் முப்படைகளிலும் சுமார் 9,362 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் 1 லட்சத்து 13 ஆயிரம் இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த தகவலை பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும் போது தெரிவித்தார். அதன்படி தரைப்படையில் 7476 அதிகாரிகள் பணியிடங்களும் 97,177 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் பணியிடங்களும் 4850 இடைநிலை […]

Read More

கிழக்கு லடாக்கிற்கு மிக அருகே நெடுஞ்சாலைகள் அமைத்து வரும் சீன ராணுவம் !!

December 14, 2021

இந்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பேசும்போது சீனா கிழக்கு லடாக் பகுதியில் நெடுஞ்சாலைகள் சிறிய சாலைகள் மற்றும் உறைவிடங்களை அமைத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு வல்லுனர்கள் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சீனா பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்து தனது பகுதிகளாக அறிவிக்கலாம் எனவும் அதற்கான முயற்சிகள் தான் இவை எனவும் சந்தேகிக்கின்றனர். சீனா மற்றும் இந்தியா இடையே 13 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளதும் இதுவரை ஒன்றில் கூட சுமுகமான தீர்வு […]

Read More

வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட SMART தொலைதூர நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை !!

December 14, 2021

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான ஸ்மார்ட் ஏவுகணையை நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. SMART – Supersonic Missile Assisted Torpedo என பெயரிடப்பட்டு உள்ள இது சூப்பர்சானிக் ஏவுகணையை அடிப்படையாக கொண்டு இயங்கும் தொலைதூர நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணையாகும். ஒடிசாவின் பாலசோரில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சோதனை தளத்தில் இருந்து ஏவப்பட்டு அதன் முழு திறன்கள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. இந்த ஏவுகணையானது இரண்டு நிலை […]

Read More