Day: December 8, 2021

உலகின் 100 முன்னனி ஆயுத நிறுவனங்களின் பட்டியலில் மூன்று இந்திய நிறுவனங்கள் !!

December 8, 2021

உலகின் நூறு முன்னனி ஆயுத தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (SIPRI) வெளியிட்டு உள்ளது. அந்த பட்டியலில் HAL, BEL, IOF ஆகிய மூன்று இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன இவற்றின் மொத்த வியாபார மதிப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும், மேலும் 100 நிறுவனங்களுடைய வியாபாரத்தில் இவற்றின் பங்கு 1.2% ஆகும். கடந்த ஆண்டை விடவும் இவற்றின் வியாபாரம் 1.7% அதிகரித்துள்ளது இதற்கு காரணம் அதிகப்படியான உள்நாட்டு […]

Read More

மேலதிக எஸ்400 அமைப்புகளை இந்தியாவிற்கு விற்கு விரும்பும் ரஷ்யா !!

December 8, 2021

ரஷ்யா இந்தியாவுக்கான எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளின் டெலிவரியை துவங்கி உள்ளது இன்னும் சில நாட்களில் அவை இந்தியா வந்தடையும். இந்த நிலையில் ஏற்கனவே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஷரத்தில் மேலதிக ஆர்டருக்கான ஒப்பந்தம் பற்றிய விதி உள்ளது. அதன்படி இந்தியா மேலதிக எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளை மிகுந்த சிரமமின்றி வாங்கலாம் அல்லது ரஷ்யாவும் விற்க அணுகலாம். இதை அடிப்படையாக வைத்து தற்போது ரஷ்யா மேலதிக எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அணுகி […]

Read More

அட்லாண்டிக் பெருங்கடலில் முதல் கடற்படை தளத்தை அமைக்க சீனா முயற்சி அமெரிக்காவுடன் நேரடி மோதலுக்கு தயாராகிறதா ??

December 8, 2021

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சீனா தனது முதலாவது கடற்படை தளத்தை அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது அனேகமாக ஆஃப்ரிக்காவில் இது அமையலாம். இதன் மூலமாக சீனாவால் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிக்கு எதிர் பகுதியில் போர் கப்பல்களை நிலைநிறுத்த முடியும் என்பதும் இதனால் சீனா நேரடியாக அமெரிக்காவை எதிர்க்க துணிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஃப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள 28,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட ஈக்வடோரியல் கினீ எனும் நாட்டில் இந்த […]

Read More

சோபியானில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பயங்கர மோதல்

December 8, 2021

சோபியானில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். சோபியான் மாவட்டத்தில் செக் இ சொலன் எனும் கிராமத்தில் உளவுத் தகவலின் அடிப்படையில் நடைபெற்ற தேடுதல் வேட்டையும் மற்றும் அதை தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்ட பின்பு அவர்கள் சரணடைய வாய்ப்பளிக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.ஆனால் அவர்கள் சரணடைய மறுத்து விட்டனர். 14 மணி நேரம் தொடர்ந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் […]

Read More

பிரதமர் மோடி வீட்டில் அவசரமாக கூடும் பாதுகாப்பு துறை கேபினட் கமிட்டி

December 8, 2021

பாதுகாப்பு துறைக்கான கேபினட் கமிட்டி இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி அவர்கள் வீட்டில் கூட உள்ளது.இந்திய விமானப்படை வானூர்தி ஊட்டி அருகே விபத்துக்குள்ளானது தொடர்பாக இந்த கூட்டம் மாலை 6.30 மணிக்கு கூட உள்ளது. இந்த விபத்தில் ஒருங்கிணைந்த படை தளபதி ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 பேர் சிக்கினர்.அவர்கள் தவிர சிடிஎஸ் உதவியாளர் பிரிகேடியர் லித்தர், லெப் கலோ ஹர்ஸிந்தர் சிங், நாய்க் குரூஸ்விக் சிங் ,நாய்க் ஜிதேந்திர குமார், லான்ஸ் […]

Read More

ஹைதராபாத் நகரில் அமெரிக்க எஃப்16 போர் விமானத்திற்கான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இறக்கைகள் தயாரிப்பு !!

December 8, 2021

அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் டாடா லாக்ஹீட் மார்ட்டின் ஏரோ ஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (TLMAL) நிறுவனத்தை தனது வருங்கால கூட்டாளியாக அங்கீகரித்துள்ளது. இதனை தொடர்ந்து Tata Lockheed Martin Aerostructures Limited (TLMAL) நிறுவனத்தின் ஹைதராபாத் தொழிற்சாலையில் எஃப்-16 போர் விமானத்திற்கான முதல் செட் இறக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கான விழாவில் தெலுங்கானா மாநில தொழில்துறை அமைச்சர் கே டி ராம ராவோ லாக்ஹீட் மார்ட்டின் இந்திய பிரிவு அதிகாரிகள் மற்றும் டாடா நிறுவனத்தின் அதிகாரிகள் […]

Read More

ஊட்டி வெலிங்கடன் ராணுவ முகாமில் கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து 4 பேர் மரணம் !!

December 8, 2021

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூரில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் அமைந்து உள்ளது இங்கு பார்வையிட இன்று மூத்த ராணுவ அதிகாரிகள் வந்தனர். அவர்களில் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தும் அடக்கம் அவர்கள் பயனம் செய்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் 4 பேர் மரணமடைந்து உள்ளதாகவும் மூன்று பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணியில் உடனடியாக ராணுவத்தினர் மற்றும் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Read More

VLSRSM – செங்குத்தாக ஏவப்படும் குறுந்தூர வானிலக்கு ஏவுகணையின் சோதனை வெற்றி !!

December 8, 2021

நேற்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் செங்குத்தாக ஏவப்படும் குறுந்தூர வானிலக்கு ஏவுகணை வெற்றிகரமாக ஒடிசா மாநிலம் சண்டிபூரில் உள்ள சோதனை மையத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை VLSRSAM – Vertical Launch Short Range Surface to Air Missile என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது இவற்றை கடற்படையின் போர் கப்பல்களில் பயன்படுத்தி கொள்வது தான் நோக்கமாகும். கடற்படையின் போர் கப்பல்கள் குறைந்த தூரத்தில் வரும் வான் இலக்குகளை தாக்கி அழித்து தங்களை அல்லது […]

Read More

மணிப்பூரில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கைப்பற்றிய அஸ்ஸாம் ரைபிள்ஸ்

December 8, 2021

அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் மணிப்பூர் காவல்துறை வீரர்கள் இணைந்து நடத்திய ஆபரேசனில் 500 கோடிகள் ரூபாய் அளவிலான போதை பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மணிப்பூரில் உள்ள மோரே நகரத்தில் நகரத்தில் உளவுத் தகவல்களின் அடிப்படையில் மணிப்பூர் காவல்துறை மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த போதை பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 500 கோடிகள் என கணக்கிடப்பட்டுள்ளன.54கிகி பிரௌன் சுகர் மற்றும் 154கிகி மெதம்பெடமைன் எனும் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதனுடன் தொடர்புடைய மியான்மரை […]

Read More

இனி இரஷ்ய தயாரிப்பு விமானங்கள் இந்திய விமானப்படையில் செயல்படுமா ?

December 8, 2021

இந்திய விமானப்படை நெடுங்காலமாகவே இரஷ்ய தயாரிப்பு விமானங்களை தனது படையில் இணைந்து இயக்கி வருகிறது. சுகாய்-7 , மிக்-21,23,25,27,29 , சுகாய் -30 என நெடுங்காலமாகவே இந்திய விமானப்படையில் இரஷ்ய தயாரிப்பு விமானங்கள் இருந்துள்ளன. ஆனால் தற்போது சுகாய்-30 எம்கேஐ இந்திய விமானப்படையின் கடைசி இரஷ்ய தயாரிப்பு விமானமாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு சில காரணங்களும் உள்ளன. இரஷ்ய அடுத்த தலைமுறை 5ம் தலைமுறை விமானான Su-57/FGFA மேம்படுத்தி தயாரித்து வருகிறது.இதை இந்தியாவிற்கு வழங்க […]

Read More