Day: December 6, 2021

இந்திய கடற்படையின் முதலாவது சர்வே கப்பல் கடலில் இறக்கப்பட்டது !!

December 6, 2021

கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கடற்படைக்கான முதலாவது சர்வே கப்பல் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் முன்னிலையில் கடலில் இறக்கப்பட்டது. இந்த முதலாவது கப்பலின் பெயர் ஐ.என்.எஸ். சந்தாயக் ஆகும், இந்த கப்பலை வடிவமைத்து கட்டியது கார்டன் ரீச் கப்பல் கட்டுமான தளமாகும், பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட்டின் மனைவி திருமதி. புஷ்பா பாட் கப்பலை இறக்கினார். மொத்தமாக இத்தகைய நான்கு கப்பல்கள் கட்டப்பட உள்ளன […]

Read More

லக்னோவில் திருடப்பட்ட போர் விமான டயர் கண்டுபிடிக்க பட்டது !!

December 6, 2021

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பக்ஷி கா தலாப் விமான படை தளத்திற்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து போர் விமான டயர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதை கொண்டு வந்த லாரி லக்னோ நகரத்தின் வாகன நெரிசலில் சிக்கி கொண்ட போது மிராஜ்2000 போர் விமானத்திற்கான டயர் திருடப்பட்டதாக லாரி ஒட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இரண்டு பேர் நேற்று லக்னோ விமானப்படை […]

Read More

கூட்டு பயிற்சிக்காக மாலத்தீவு சென்ற இந்திய தரைப்படை !!

December 6, 2021

மாலத்தீவு ராணுவத்துடன் நடைபெறும் வருடாந்திர எகுவரின் கூட்டு போர் பயிற்சிக்காக இந்திய தரைப்படை அணி மாலத்தீவு சென்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பூனேவில் இது நடைபெற்றது. மாலத்தீவு நாட்டில் உள்ள காது தீவில் இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை இந்த கூட்டு போர் பயிற்சிகள் நடைபெற உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சி அடக்குதல், கடல்சார் பயங்கரவாத ஒழிப்பு விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும் என தரைப்படை செய்தி தொடர்பாளர் […]

Read More

அமெரிக்க தனியார் ராணுவத்தின் உதவியை நாடிய ஆஃப்கன் தாலிபான் எதிர்ப்பு தலைவர் !!

December 6, 2021

ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களை தொடர்ந்து பாஞ்ச்ஷீர் மாகாணத்தின் அஹமது மஹ்சூத் தனது ஆதரவாளர்களுடன் எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் ஈரானிய செய்தி தாளான டெஹ்ரான் டைம்ஸ் அஹமது மஹ்சூத் அமெரிக்க தனியார் ராணுவ நிறுவனமான ப்ளாக் வாட்டர் நிறுவனத்தின் நிறுவனர் எரிக் ப்ரின்ஸை சந்தித்ததாக செய்தி வெளியிட்டு உள்ளது. ப்ளாக் வாட்டர் நிறுவனம் தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த தனியார் நிறுவனமாகும், ஈராக் மற்றும் ஆஃப்கன் போரில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. ப்ளாக் […]

Read More

முன்னாள் பாதுகாப்பு படையினரின் மரணம் தாலிபான்களுக்கு அமெரிக்கா கண்டனம் !!

December 6, 2021

சனிக்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் ஆகியவை கூட்டாக இணைந்து தாலிபான்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஜனநாயக அரசில் பங்கு வகித்த முன்னாள் பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான மரணங்கள் தாலிபான் அரசின் நடவடிக்கை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தாலிபான் அரசு தொடர்ந்து காட்டுமிராண்டி தனமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து கவலை அடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

Read More

ஐக்கிய அரபு அமீரகம் சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் !!

December 6, 2021

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அங்கு நடைபெறும் இந்திய பெருங்கடல் பொருளாதாரம், பெருந்தொற்று, சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு அந்நாட்டின் இளவரசர் மொஹம்மது பின் சாயத் அல் நயான் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லாஹ் பின் சாயத் ஆகியோரை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினார். பின்னர் ஒமன் வெளியுறவு அமைச்சர் சையத் பாதர் அப்துல்சைதி மற்றும் இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சா ஆகியோரை சந்தித்து பேசினார். […]

Read More

கராச்சி துறைமுகத்தை 1971 போரில் நாசம் செய்த படையணிக்கு இன்று ஜனாதிபதி அங்கீகாரம் !!

December 6, 2021

கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலை போரின் போது இந்திய கடற்படையின் 22ஆவது ஏவுகணை கலன் படையணி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை சர்வநாசம் செய்தது. போர் நடைபெற்று 50 ஆண்டுகள் ஆன நிலையில் கில்லர்ஸ் என அழைக்கப்படும் அந்த படையனியும் தனது 50ஆவது ஆண்டை இந்த வருடம் கொண்டாடுகிறது. ஆகவே இன்று மும்பையில் நடைபெற உள்ள விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்த படையணிக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்க உள்ளார். இந்த படையணியின் வெற்றி தாக்குதல் […]

Read More

இந்தியா சீனாவுக்கு மட்டும் அல்ல தெற்காசிய நாடுகளுக்கு மிகப்பெரிய தொந்தரவு சீன பாதுகாப்பு வல்லுனர் !!

December 6, 2021

சீன பாதுகாப்பு வல்லுநர் செங் ஷியாங் சமீபத்தில் பேசும்போது இந்தியா சீனாவுக்கு மட்டுமின்றி தெற்காசிய நாடுகளுக்கே மிகப்பெரிய தொந்தரவு எனவும், சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவுடன் தொடர்ச்சியாக நட்பு பாராட்ட முயன்றாலும் இந்தியா அதனை ஏற்று கொள்வதில்லை எனவும் இந்தியாவின் இத்தகைய அடாவடி சிந்தனை தான் அனைத்து எல்லையோர பிரச்சினைகளுக்கும் காரணம் மேலும் அடாவடி செயல்பாடுகள் மூலமாக தனது எண்ணங்களை நிறைவேற்ற முயல்கிறது எனவும் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்திய சீன எல்லையோரம் நடைபெறும் பிரச்சினைகள் […]

Read More

இந்தியாவின் ராஜதந்திர முயற்சி; தாலிபான் அரசை அங்கீகரிக்க சர்வதேச நாடுகள் மறுப்பு !!

December 6, 2021

அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா ஃபிரான்ஸ் போன்ற பல நாடுகள் ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தாலிபான்களின் அரசை அங்கீகரிக்க மறுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் ஆஃப்கானிஸ்தானில் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் எதுவும் காண முடியாத நிலையில் தாலிபான்களின் அரசை அங்கீகரிக்க மறுத்துள்ளது. இவை அனைத்திற்கும் இந்தியாவின் ராஜதந்திர அழுத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் காரணம் என கூறப்படுகிறது.ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நாள் முதலாகவே இந்தியா தனது நடவடிக்கைகளை துவங்கியதாக தெரிகிறது. குறிப்பாக அந்நாட்டு மக்களுக்கு உதவ வேண்டும்.ஆனால் தாலிபான்களின் அரசை அங்கீகரிக்க […]

Read More

ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வரும் இந்தியா- அமித் ஷா

December 6, 2021

நாட்டின் எல்லைகளில் ட்ரோன்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைத் தடுக்க, இந்தியா உள்நாட்டிலேயே ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாகவும், இது விரைவில் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) 57வது தொடக்க நாள் விழாவில் பேசிய ஷா, மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, எல்லைப் பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பு என்றும், உலகின் மிகச் சிறந்த எல்லைக் காவல் தொழில்நுட்பங்களை பிஎஸ்எப் படைக்கு வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும் […]

Read More