Day: December 3, 2021

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியக் கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது: அட்மிரல் ஹரிகுமார்

December 3, 2021

அட்மிரல் ஆர் ஹரி குமார் இந்தியக் கடற்படை சீனாவின் நடவடிக்கைகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றது என கூறியுள்ளார். சீனாவிற்கும் அதன் விரிவாக்க எண்ணங்களுக்கும் வலுவான செய்தியை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமார் கூறியுள்ளார். இந்திய கடற்படை இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் முழு நம்பிக்கை கொண்டுள்ளது மேலும் நாடு எதிர்கொள்ளும் சாத்தியமான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள புதிய தளவாடங்களை கையகப்படுத்துவதிலும் முனைப்புடன் உள்ளது. கடற்படை தினத்தை முன்னிட்டு ஒரு செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அட்மிரல் […]

Read More

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு நோக்கி நகரும் 200 பயங்கரவாதிகள்

December 3, 2021

ஆப்கானிஸ்தான் அரசு ராணுவத்துக்கு எதிரான போரில் தலிபான்களுக்கு உதவிய பயங்கரவாதிகள் குறித்து இந்திய பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இப்போது, முதன்முறையாக, தலிபான்கள் ஆட்சியில் இருப்பதால், ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தின் துப்பாக்கி ஏந்திய சுமார் 200 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி தற்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி நகர்ந்துள்ளனர். தற்போது நிகியல் மற்றும் கோட்லியில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களில் உள்ள […]

Read More

தைவானில் அதிகரித்து வரும் ஊடுருவல் குறித்து அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர் ராணுவ அதிகாரிகள் சந்திப்பு

December 3, 2021

தைவானில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழின் படி, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லியாட் ஆஸ்டின் மற்றும் சூ கிலியாங் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க இரு நாடுகளும் தொடர்பில் உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் விர்ச்சுவல் உச்சிமாநாட்டை […]

Read More

அதிபர் புதின் இந்திய வருகையின் போது மிக்-29 விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

December 3, 2021

இரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையின் போது 21 Mig-29UPG போர்விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் ஏற்படுமாயின் விமானப்படைக்கு இரஷ்யா பயன்படுத்தாக 21 mig 29 airframes கிடைக்கும்.இவற்றை UPG தரத்திற்கு இந்திய விமானப்படை அப்கிரேடு செய்து தனது படையில் இணைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர உத்தம் AESA Radar ரேடார் மற்றும் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள D-29 EW suite ஆகியவையும் பெறப்பட உள்ளன. இந்திய- இரஷ்ய […]

Read More

இந்தியாவிற்கு ரஃபேலின் பாதி விலையில் 114 போர் விமானங்களை விற்க சுவீடன் ஆஃபர் !!

December 3, 2021

சுவீடன் நாட்டை சேர்ந்த நிறுவனமான SAABன் தயாரிப்பு தான் க்ரைப்பன் போர் விமானம், அதனை விற்க இந்தியாவை அணுகி உள்ளது. அதாவது க்ரைப்பன்-ஈ ரக ஒற்றை என்ஜின் போர் விமானத்தை ரஃபேல் விமானத்திற்கான பாதி விலையில் தருவதாக அறிவித்துள்ளது.ஆனால் அளவில் பெரிய ரஃபேல் இரட்டை என்ஜின் விமானமாகும். இது தவிர தேஜாஸ் மார்க்-2 மற்றும் ஐந்தாம் தலைமுறை ஆம்கா போர் விமான திட்டங்களிலும் இந்தியாவுக்கு உதவுவதாகவும் சுவீடன் அறிவித்துள்ளது. க்ரைப்பன்-ஈ போர் விமானத்தின் மார்கெட்டிங் அதிகாரி இதுபற்றி […]

Read More

லக்னோ விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போர் விமான டயர் திருட்டு !!

December 3, 2021

லக்னோ விமானப்படை தளத்திற்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ தளவாடங்கள் கருவிகள் லாரி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த லாரியில் ஒரு மிராஜ்2000 ரக போர் விமானத்தின் ஐந்து டயர்களும் கொண்டு செல்லப்பட்டன. அப்போது லக்னோ நகரத்தில் வாகன நெரிசல் காரணமாக லாரி நகர முடியாமல் சிக்கி கொண்டது. லாரியை ஏற்கனவே பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி போர் விமான டயரை திருடி சென்றுள்ளனர். திருட்டு நடைபெற்றதை அறிந்த […]

Read More

காஷ்மீர் குண்டுவீச்சு வழக்கு விசாரணை நிறைவு மூவர் கைது பாக் தொடர்பு அம்பலமானது !!

December 3, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்ஹாலன் பகுதியில் இந்த வருடம் ஜனவரி மாதம் குண்டுவீசி தாக்குதல் நடைபெற்றது இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நேற்று தரைப்படை, சஷாஸ்திர சீமா பல் (துணை ராணுவம்) மற்றும் காவல்துறை அணிகள் கூட்டாக சோதனையில் ஈடுபட்டு இருந்தன. அப்போது சந்தேகத்திற்கு உரிய மூன்று பேரை நோக்கி படையினர் விரைந்தனர்.இதனை கண்டதும் மூவரும் தப்பி செல்லும் பொருட்டு விளை நிலங்களின் வழியாக ஒட துவங்கினர். […]

Read More

இக்லா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை உள்நாட்டிலேயே மேம்படுத்தும் பாரத் டைனமிக்ஸ் !!

December 3, 2021

இந்திய தரைப்படை பயன்படுத்தி வரும் குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளில் ஒன்று தான் இக்லா-1எம் இதனை தோளில் சுமந்து ஏவலாம். தற்போது இந்த இக்லா-1எம் ரக ஏவுகணைகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, இதன் மதிப்பு 471 கோடி ரூபாய் ஆகும். அடுத்த பத்து வருடங்களுக்கு இந்த மேம்படுத்தல் பணிகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த ஒப்பந்தத்தை அடுத்து பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு தலா ரூ.426 அளவுக்கு ஏற்றம் கண்டது.

Read More

டிசம்பர் இறுதியில் சீனாவுடன் 14ஆவது சுற்று பேச்சுவார்த்தை !!

December 3, 2021

இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை பிரச்சினையை சுமுகமாக தீர்க்கும் நோக்கில் இரண்டு நாடுகளும் ஏற்கனவே 13 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன. இதுவரை இத்தனை சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும் எவ்வித முன்னேற்றமும் இல்லா நிலையில் இந்த மாத இறுதியில் 14ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளை தொடர்ந்து சீன தரப்பு நிராகரித்து வருவதால் இழுபறி நிலையும் தொடர்கிறது. மேலும் பல ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து எல்லையோரம் பணியாற்றி வருகின்றனர். […]

Read More

உக்ரைனுடைய ராணுவத்தில் பாதி ரஷ்ய எல்லையோரம் குவிப்பு !!

December 3, 2021

உக்ரைன் தற்போது ஏறத்தாழ ஒரு லட்சம் வீரர்கள் மற்றும் மிகப்பெரிய அளவில் தளவாடங்களை ரஷ்ய எல்லையுடன் உள்ள டான்பாஸ் பகுதியில் நிறுத்தி உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் மரியா ஸகரோவா பேசுகையில் உக்ரைனுடைய ராணுவம் வீரர்கள் மற்றும் தளவாடங்களை அதிகளவில் குவித்து வருவதாக தெரிவித்தார். ஏற்கனவே 1,25,000 வீரர்கள் பிரச்சினை நிறைந்த டான்பாஸ் பகுதியில் உள்ளதாகவும் இது உக்ரைனுடைய ராணுவத்தில் பகுதி அளவு எனவும் அவர் கூறினார். அதை போல […]

Read More