
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரித்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் விரைவில் சேவையை துவங்க உள்ளது.
முதலாவது இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் நேற்று பிரதமர் மோடியால் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் உலகிலேயே அதிக உயரத்தில் அதாவது 15,000 அடிக்கு மேல் தாக்குதல் நடத்த முடியும் என்பது தான்.
சீனாவின் தாக்குதல் ஹெலிகாப்டர்களால் இது முடியாது அவை அதிக உயரத்தில் திணறுவதாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தெளிவாக தெரிகிறது.
இதன்மூலம் லடாக் மற்றும் மலை பிரதேச பகுதிகளில் இவற்றை போதுமான அளவில் இயக்கினால் சீனாவுக்கு கடும் சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.