
முன்னாள் விமானப்படை தலைமை தளபதி ராகேஷ் குமார் பதவ்ரியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஐந்தாம் தலைமுறை விமானங்களை இறக்குமதி செய்யும் எண்ணமே இல்லை எனவும் ஆம்காவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
இந்தியா சொந்தமாக தயாரித்து வரும் ஐந்தாம் தலைமுறை ஆம்காவின் சோதனை விமானத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய விமானப்படை, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, வானூர்தி மேம்பாட்டு முகமை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை கலந்தாலோசித்து,
இதற்கான கோப்புகளை பாதுகாப்பு துறை தொடர்பான கேபினட் கமிட்டியின் பார்வைக்கு அனுப்பி வைக்க உள்ளன பின்னர் அந்த கமிட்டி இதற்கான அனுமதிகளை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆம்காவின் சோதனை விமானம் 2025-2026 ஆண்டு வாக்கில் பறக்க தயாராகும் ஆனால் இதற்கான என்ஜின் இனிதான் இறுதி செய்யப்பட உள்ளதும் 2035வாக்கில் படையில் இணைய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.