
இந்திய விமானப்படை இதுவரை 30 ரஃபேல் போர் விமானங்களை பெற்றுள்ளது மீதமுள்ள ஆறு ரஃபேல் விமானங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வாக்கில் டெலிவரி செய்யப்பட்டு விடும்.
மேலும் இவற்றின் வருகை காரணமாக இந்திய விமானப்படையின் வலு இந்த பிராந்தியத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது, ஆனாலும் விமானப்படை மிராஜ்2000 விமானங்களை கொண்டாடி வருகிறது.
இதற்கு காரணம் ஒரு மிராஜ் 2000 போர் விமானத்தை உத்தரவு கிடைத்த அடுத்த ஆறே நிமிடங்களில் தயார் செய்து பறக்க வைக்க முடியும் என்பது தான்.
இந்தியா எப்போதெல்லாம் முதலாவது தாக்குதல் நடத்த வேண்டும் என நினைக்கிறதோ அப்போது மிராஜ் தான் அந்த வேலையை கனகச்சிதமாக முடிக்கும்.
அப்படி தான் எல்லை தாண்டி சென்று பாலகோட்டில் தாக்குதல் நடத்துவதற்கும் மிராஜ்2000 போர்விமானங்களை விமானப்படை தேர்வு செய்தது.
கார்கில் போரில் கூட மிராஜ்2000 விமானங்கள் தான் அதி தீவிரமாக தாக்குதல் நடத்த உதவின லேசர் வழிகாட்டபட்ட குண்டுகளை கொண்டு சுமார் 200 முறை இந்த விமானங்கள் பறந்து தாக்குதல் நடத்தி உள்ளன.
ஆகவே தான் இந்தியா தன்னிடம் உள்ள அனைத்து மிராஜ்2000 விமானங்களையும் தரம் உயர்த்தி வருவதோடு மட்டுமின்றி சமீபத்தில் ஃபிரான்ஸிடம் இருந்து இரண்டு மிராஜ் விமானங்களை இரண்டாந்தரமாக வாங்கி தரம் உயர்த்த அனுப்பியுள்ளது.
இந்திய விமானப்படையின் தாக்குதல் சக்தி மற்றும் திறனில் மிராஜ்2000 ரக போர் விமானங்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது ஆகவே தான் அவற்றை 2035 வரை பயன்படுத்தும் வகையில் விமானப்படை மேம்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.