
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பித்தோராகரில் உள்ள முனாகோட்டில் ‘சைனிக் சம்மான் யாத்ரா’ தொடக்க விழாவில் பேசுகையில், இந்திய ராணுவத்தின் துணிச்சலான முயற்சிகள் மற்றும் ஆர்வத்தை பாராட்டிய சிங், ‘இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க’ அதிகபட்ச முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக கூறினார்.
சீனாவுடனான எல்லை மோதலை சுட்டிக்காட்டிய அவர், பதிலடி கொடுப்பதற்கான நாட்டின் திறமையையும் உறுதிப்படுத்தினார்.
“இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் அனைத்து முயற்சிகளையும் செய்கிறது, ஆனால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று அவர்களுக்கு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளோம்.”இது ஒரு புதிய மற்றும் சக்திவாய்ந்த இந்தியா.” என அவர் பேசியுள்ளார்.
“தேவைப்பட்டால் நாங்கள் சர்ஜிகல் ஸ்ரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் இரண்டையும் செய்வோம் என்று அவர் மேலும் கூறினார்.
அண்டை நாடுகள் மற்றும் அவற்றை நோக்கிய தேசத்தின் கண்ணோட்டம் குறித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர், இந்தியா அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவைப் பேணுவதில் உறுதியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தினார். இந்தியா இதுவரை ஒருபோதும் தாக்குதல்களைத் தொடங்கவில்லை அல்லது இறையாண்மையுள்ள மற்றொரு நாட்டில் காலடி வைத்ததில்லை என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
இந்தியா – நேபாள உறவுகள் பிரிக்க முடியாதவை’
நேபாளத்தின் ராணுவத் தளபதி ஜெனரல் பிரபு ராம் ஷர்மாவுடனான தனது சமீபத்திய சந்திப்பை நினைவுகூர்ந்த சிங், இந்தியா மற்றும் நேபாள உறவுகள் ‘துண்டிக்க முடியாதவை’ என்று உறுதிப்படுத்தினார், இரு நாடுகளும் கலாச்சாரத்திலிருந்து உருவான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என பேசியுள்ளார்.