
கல்வான் ஹீரோ ஹவில்தார் கே. பழனி சீனர்களுடனான மோதலின் போது உயர்ந்த தியாகத்திற்காக வீர் சக்ராவைப் பெற்றார்.இந்த விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.தற்போது அவரது மகன் தான் எதிர்காலத்தில் இந்திய இராணுவத்தில் சேர விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவரிடம் இருந்து வீர் சக்ரா விருதை பெற்ற பிறகு பேசிய அவரது மகன் என் தந்தையை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் மற்றும் இராணுவத்தில் நான் இணைவேன் என பேசியுள்ளார்.
ஹவில்தார் பழனி தவிர கல்வானில் போரில் வீரமரணம் அடைந்த மேலும் சில வீரர்களுக்கு வீரதீர விருது வழங்கப்பட்டது.