
அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கிகளுக்கான உலோகங்கள் தர சோதனையில் தோல்வி அடைந்த பின்னரும் தரம் நிறைந்தது என சான்றளித்து சப்ளை செய்யப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த தரம் குறைந்த உலோகங்களை வைத்துதான் அமெரிக்க கடற்படையின் பல முன்னணி நீர்மூழ்கி கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ராட்கென் எனும் உலோகவியல் நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக கப்பல் கட்டுமான நிறுவனங்களுக்கு உலோகத்தை சப்ளை செய்து வருகிறது இந்த நிறுவனம் தான் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றிய எலெய்ன் தாமஸ் என்பவர் தர சோதனையில் தோல்வி அடைந்த உலோகங்களை தரச்சான்றிதழ் அளித்து சப்ளை செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அமெரிக்க கடற்படை தனது நீர்மூழ்கி கப்பல்கள் அனைத்தையும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி உள்ளது.