ஆப்கனுக்கான அமெரிக்க தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தாமஸ் வெஸ்ட் இந்திய சுற்றுபயணமாக வந்துள்ளார்.
தலைநகர் தில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது ஆஃப்கானிஸ்தான் நிலவரம் குறித்தும், சமீபத்தில் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற “ஆஃப்கன் குறித்த பிராந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர்களின் கூட்டம்” குறித்தும் விவாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆஃப்கனுக்கு உலகளாவிய ரீதியில் மனிதாபிமான அடிப்படையில் உதவுவது மற்றும் இருதரப்பு உறவுகள் ஒத்துழைப்பு ஆகியற்றை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முன்னதாக தாமஸ் வெஸ்ட் ரஷ்யா சென்று ஆஃப்கனுக்கான ரஷ்ய தூதர் ஸமீர் காபுலோவ் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலர் அலெக்சாண்டர் வெனடிக்டோவ் ஆகியோரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.