ஃபிரான்ஸில் இருந்து இந்தியா விமானப்படையில் இணைய வந்த 2 மிராஜ் போர் விமானங்கள் !!

  • Tamil Defense
  • November 25, 2021
  • Comments Off on ஃபிரான்ஸில் இருந்து இந்தியா விமானப்படையில் இணைய வந்த 2 மிராஜ் போர் விமானங்கள் !!

இன்று குவாலியர் விமானப்படை தளத்திற்கு இரண்டு ஃபிரெஞ்சு மிராஜ்2000 போர் விமானங்கள் வந்தடைந்தன.

அவை பயிற்சி விமானங்கள் எனவும் அவற்றை இந்திய விமானப்படையின் மிராஜ்2000 போர் விமானங்களுக்கு இணையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்திய விமானப்படை ஏற்கனவே தன்னிடம் இருந்த 51 மிராஜ் 2000 போர் விமானங்களை தரம் உயர்த்த பல்வேறு தொழில்நுட்பங்களை வாங்கியது ஆனால் சில விமானங்கள் விபத்தில் சிக்கிய நிலையில்,

பயன்படுத்தப்படாத கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்த விமானங்களில் பயன்படுத்தி அவற்றை தரம் உயர்த்தி படையில் இணைக்க இந்திய விமானப்படை விரும்புகிறது.

இந்த மிராஜ்2000 ரக போர் விமானங்கள் வருகிற 2035 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப்படையின் சேவையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.