பாகிஸ்தான் கடற்படைக்கான நான்காவது கப்பலின் கட்டுமான பணிகளை துவங்கிய துருக்கி !!

  • Tamil Defense
  • November 6, 2021
  • Comments Off on பாகிஸ்தான் கடற்படைக்கான நான்காவது கப்பலின் கட்டுமான பணிகளை துவங்கிய துருக்கி !!

பாகிஸ்தானுடைய துறைமுக நகரமான கராச்சியில் பாகிஸ்தான் கடற்படைக்கான நான்காவது “அடா” ரக கார்வெட் கப்பலின் கட்டுமான பணிகள் துவங்கியது.

இதற்கான விழாவில் பாகிஸ்தான் கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் அம்ஜாத் கான் நியாஸி கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் இந்த கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படையை வலுப்படுத்தும் என்றார்.

இந்த கப்பலின் கட்டுமான பணிகள் பாகிஸ்தான் கடற்படையின் ஒரு பிரிவான கராச்சி கப்பல் கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனத்தால் (KSEW) கட்டப்பட உள்ளது, இதற்கு துருக்கி தொழில்நுட்ப பரிமாற்றத்தை அளிக்க உள்ளது.

மேலும் முதல் இரண்டு கப்பல்கள் துருக்கியில் அந்நாட்டு பொதுத்துறை நிறுவனமான AFSAT ஆல் கட்டப்பட்டு பாகிஸ்தான் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2400 டன் எடை கொண்ட இந்த வகை கப்பல்களால் 29 நாட்ஸ் வேகத்தில் செல்ல முடியும் மேலும் வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கடற்பரப்பு ஆயுதங்கள் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.