Breaking News

மும்பை தாக்குதலை தடுக்க தவறியதால் பிறகு ராஜினாமா செய்ய முன்வந்த அன்றைய ரா தலைவர் !!

  • Tamil Defense
  • November 26, 2021
  • Comments Off on மும்பை தாக்குதலை தடுக்க தவறியதால் பிறகு ராஜினாமா செய்ய முன்வந்த அன்றைய ரா தலைவர் !!

பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மாநகரை பல நாட்களுக்கு முடக்கி போட்ட பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.

10 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் எட்டு வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 257 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர், 700க்கும் அதிகமானோரை காயப்படுத்தினர்.

இந்திய வரலாற்றிலேயே மிகவும் மோசமான இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அன்றைய ரா தலைவரான அஷோக் சதுர்வேதி அன்றைய பிரதமர் திரு. மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

ஆனால் திரு. மன்மோகன் சிங் அவர்கள் அஷோக் சதுர்வேதியின் ராஜினாமா கடிதத்தை ஏற்று கொள்ளாமல் அவரிடம் ராஜினாமா செய்ய வேண்டாம் எனக்கூறி அனுப்பி வைத்துள்ளார்.

ரா அமைப்பு போதிய உளவு தகவல்களை பல்வேறு பாதுகாப்பு படைகளுக்கும் அனுப்பி வைத்த நிலையிலும் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க முடியாமல் தோல்வி அடைந்தன.

உள்நாட்டு உளவு அமைப்பான இன்டலிஜென்ஸ் பீயூரோ மும்பை காவல்துறை, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காழல்படை ஆகியவற்றிற்கு இந்த தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட அல் ஹூசைனி என்ற கப்பலில் பயங்கரவாதிகள் பயணித்தனர் அக்கப்பலை கடற்படை மற்றும் கடலோர காவல்படை தகுந்த நேரத்தில் தடுக்க தவறிய நிலையில்,

பயங்கரவாதிகள் அல் ஹூசைனி கப்பலில் இருந்து புறப்பட்டு எம்.வி குபேர் எனும் மீன்பிடி படகை கடத்தி மும்பை மாநகரை வந்தடைந்து பிரிந்து சென்று தாக்குதல் நடத்தினர்.

மேலும் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் ஆகியவை நமது ராவுக்கு தகவல்களை இதுபற்றிய திரட்ட உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.