குறைந்தபட்சம் 3 மேலதிக ராணுவ பள்ளிகளை தமிழகத்திற்கு கொண்டு வர திட்டம்-தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் !!

  • Tamil Defense
  • November 17, 2021
  • Comments Off on குறைந்தபட்சம் 3 மேலதிக ராணுவ பள்ளிகளை தமிழகத்திற்கு கொண்டு வர திட்டம்-தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் !!

தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி. கயல்விழி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஷண்முக சுந்தரம் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் அமராவதிநகர் ராணுவ பள்ளிக்கு விசிட் சென்றனர்.

அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்று பள்ளியை சுற்றி காண்பித்தனர் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அமராவதிநகர் ராணுவ பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அங்குள்ள பலவற்றை தமிழக அரசு பள்ளிகளில் அமல்படுத்த விரும்புவதாகவும்,

அமராவதிநகர் ராணுவ பள்ளியை போலவே மேலும் மூன்று ராணுவ பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது மட்டும் நடைபெற்றால் தமிழகத்தில் இருந்து முப்படைகளில் இணையும் அதிகாரிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது உண்மை.

நாடு முழுவதும் மத்திய அரசு நூற்றுக்கணக்கான ராணுவ பள்ளிகளை திறக்க திட்டம் ஒன்றை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே மத்திய மாநில அரசுகள் இவ்விஷயத்தில் ஒன்றினைந்து செயல்பட்டு பள்ளிகளை திறக்க வேண்டும்.