
மனித குலம் விண்வெளியை ஆய்வு செய்து தெரிந்து கொண்ட அளவில் கால் பங்கு கூட கடலுக்கடியே ஆய்வு செய்யவில்லை, ஆகவே சமீப காலமாக உலகளவில் கடலடி ஆய்வு அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.
தற்போதைய நிலையில் உலகில் அமெரிக்கா ரஷ்யா ஃபிரான்ஸ் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே அதிக ஆழத்திற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளன.
இந்த வரிசையில் இந்லியாவும் தற்போது இணைந்துள்ளது, சமுத்ராயன் என்ற திட்டத்தின்கீழ் மத்ஸ்யா எனும் நீர்மூழ்கி மூலமாக கடலக்குள்ளே சுமார் 6 கிலோமீட்டர் தொலைவு வரை மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதற்காக சென்னையில் அமைந்துள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு திட்டத்தை துவங்கி வைத்தார்.
பின்னர் சென்னை துறைமுகம் சென்று இந்த திட்டத்தில் ஈடுபட உள்ள ஒ.ஆர்.வி சாகர் நிதி எனும் அதிநவீன ஆய்வு கப்பலை பார்வையிட்டார், இக்கப்பல் சுமார் 60 டன் எடையை கடலுக்குள் 6 கிலோமீட்டர் ஆழம் வரை அனுப்பி பின்னர் மேல்கொண்டு வரும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கப்பலில் கடலுக்குள்ளே அனுப்பக்கூடிய மத்ஸ்யா எனும் ஆய்வு கலன் உள்ளது இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும், இதனால் 6 கிலோமீட்டர் ஆழம் வரையிலான அழுத்தத்தை தாங்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
மத்திய அரசு ஆழ்கடல் ஆய்வு திட்டங்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் செலவிட சுமார் 4077 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.