இந்தியாவின் ஹீரோ அபிநந்தனுக்கு பதவி உயர்வு !!

  • Tamil Defense
  • November 3, 2021
  • Comments Off on இந்தியாவின் ஹீரோ அபிநந்தனுக்கு பதவி உயர்வு !!

கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற மோசமான தற்கொலை படை தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்கள் உயிர் இழந்தனர்.

இதனையடுத்து இந்திய விமானப்படை ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

இதையொட்டி இந்தியாவை பழிவாங்கும் வகையில் ஊடுருவிய பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை இந்திய விமானப்படை விரட்ட தனது விமானங்களை அனுப்பியது.

அப்போது தனது மிக்21 ரக போர் விமானத்தில் சென்று பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்16 போர் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.

அதன்பிறகு பாகிஸ்தானில் துரதிர்ஷ்டவசமாக சிக்கி கொண்ட அவரை சித்திரவதை செய்த பாகிஸ்தான் பின்னர் இந்திய பதிலடிக்கு அஞ்சி விடுதலை செய்தது.

மீண்டும் போர் விமானங்களை இயக்கி வந்த அபிநந்தன் வர்த்தமான் அவர்களுக்கு தற்போது க்ருப் கேப்டனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.