
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமைதியாக இருந்த போது தீடிரென அப்பாவி பொதுமக்கள் மற்றும் பிற மாநில தொழில் முனைவோர் தொழிலாளர்கள் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவங்களில் பலர் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு படைகள் தங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த படிப்படியாக தாக்குதல்கள் கட்டுபடுத்தப்பட்டன.
பாதுகாப்பு படைகளின் சீரிய நடவடிக்கை காரணமாக இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக நம்பதகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது சீர்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன உளவு சார்ந்த நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.