
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் பட்டா தூர்ரியான் கிராமத்தை சேர்ந்த பயங்கரவாத ஆதரவாளர் ஒருவனை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே பூஞ்ச் ஆபரேஷனில் கொல்லப்பட்ட ஜியா முஸ்தபா என்ற பயங்கரவாதிக்கும் தற்போது கைது செய்யப்பட்டவனுக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாத ஆதரவாளரின் பெயர் முஹம்மது யாசிர் எனவும் தொடர்ந்து விசாரணையில் உள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.