
கருங்கடல் பகுதியில் நேற்று அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ். விட்னி எனும் கட்டளையக போர்க்கப்பல் நுழைந்தது.
உடனடியாக உஷாரான ரஷ்ய கடற்படையின் கருங்கடல் படைப்பிரிவு உடனே அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கி கண்காணிக்க துவங்கியது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்தியாளர்களிடம் பேசும்போது அமெரிக்க கப்பல் ரஷ்ய கடற்படையின் பார்வையில் உள்ளதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதுபற்றி அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு செல்வதாகவும் அங்கு நேட்டோ படைகளுடன் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.