புதின் இந்தியா சுற்றுபயணம் AK-203 துப்பாக்கி ஒப்பந்தம் மறு ஆய்வு !!

  • Tamil Defense
  • November 22, 2021
  • Comments Off on புதின் இந்தியா சுற்றுபயணம் AK-203 துப்பாக்கி ஒப்பந்தம் மறு ஆய்வு !!

ரஷ்ய அதிபர் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வர உள்ளார் இதனையடுத்து AK-203 துப்பாக்கி ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட சில முடிவுகள் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும்

அதற்கு பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் கூட்டுபடைகள் தலைமை தளபதி, முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறை செயலர் ஆகியோர் அடங்கிய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின் படி சுமார் 6 லட்சம் AK-203 துப்பாக்கிகள் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் 10 வருடங்களில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாகவும்,

முதற்கட்டமாக சுமார் 70,000 ஆயிரம் துப்பாக்கிகள் 32 மாதங்களில் டெலிவரி செய்யப்படும் இவை ரஷ்ய தயாரிப்பு பாகங்களை கொண்டிருக்கும், இந்த ஒப்பந்தத்தின் சுமார் 5,124 கோடி ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.