
எதிர்காலத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கு ரஷ்யா தனது அதிநவீனமான எஸ்500 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய ஃபெடரல் ராணுவ தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் டிமித்ரி ஷூகயேவ் இந்த தகவலை வெளியிட்டு உள்ளார் மேலும் அவர் பேசும் போது ரஷ்ய படைகளுக்கான சப்ளை முடிந்ததும் ஏற்றுமதி துவங்கும் என்றார்.
இந்தியா மற்றும் சீனா தவிர ரஷ்யாவுடன் நீண்ட நெருங்கிய நம்பகமான உறவுகள் கொண்ட மற்ற நாடுகளுக்கும் இந்த அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
எஸ்500 ப்ரோமித்தியஸ் வான் பாதுகாப்பு அமைப்பானது சுமார் 600 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்டது மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மற்றும் வானூர்திகளை தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.