
ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவதற்கான உதவி குறித்து துருக்கி உடன் இரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்ய ஃபெடரல் சேவை இயக்குநர் டிமிட்ரி ஷுகேவ் கூறியுள்ளார்.
துருக்கி குடியரசிற்கு (ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவதில்) உதவி செய்ய ரஷ்யா தயார்க உள்ளதாக பலமுறை கூறிய பிறகு இப்போது நாங்கள் இந்த திட்டத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் ” என்று ஷுகேவ் ஞாயிற்றுக்கிழமை ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
அக்டோபரில், எப்-35 விநியோக திட்டத்தில் இருந்து துருக்கியை அமெரிக்கா விலக்கிய பின்னர், எப்-16 ஜெட் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா துருக்கியிடம் கூறியது.
ஏப்ரலில், ரஷ்ய எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை துருக்கி வாங்கியதன் காரணமாக,
எப்-35 போர் விமானங்களின் தயாரிப்பு திட்டத்தில் இருந்து துருக்கியை அமெரிக்கா ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.