ஏவுகணை சோதனையில் செயற்கைகோளை அழித்ததாக ரஷ்யா ஒப்புதல் !!

  • Tamil Defense
  • November 18, 2021
  • Comments Off on ஏவுகணை சோதனையில் செயற்கைகோளை அழித்ததாக ரஷ்யா ஒப்புதல் !!

ரஷ்யா தனது ஏவுகணை சோதனையின் போது அந்நாட்டுக்கே சொந்தமான செயற்கைகோள் ஒன்றை அழித்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

கடந்த 1982ஆம் ஆண்டு முதல் செலினா எனும் செயற்கைகோள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் சோதனையில் அழிக்கப்பட்டது.

இந்த செயற்கைகோள் அழிந்த போது சுமார் 1500 துண்டுகளாக சிதறி விண்வெளியில் சுற்றி வருவதாகவும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு ஆபத்தாக உள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில்,

தற்போது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த நிகழ்வை ஏற்று கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.