ஆத்மநிர்பார் திட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்க ஃபிரான்ஸ் தயாராக உள்ளதாகவும் தொடர்ந்து பாதுகாப்பு துறையில் அதிநவீன திட்டங்களில் உதவ உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள இந்திய தூதரகத்தில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்மானுவேல் போன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதையொட்டி இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் ஃபிரான்ஸ் தரை வான் மற்றும் கடல் சார்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களில் இந்தியாவுக்கு உதவ வாக்குறுதி அளித்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் ஃபிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளாரன்ஸ் பார்லி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜீன் யீவ்ஸ் லெட்ரியன் ஆகியோரையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.