
உத்தராகண்ட் மாநிலத்தில் சீன எல்லைக்கு செல்லும் சாலைகளை அகலபடுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
அதாவது சிட்டிஸன்ஸ் ஃபார் க்ரீன் டூன் எனும் தனியார் தொண்டு நிறுவனம் இந்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜராகி சீன எல்லைக்கு செல்லும் சாலைகளை அகலபடுத்தாவிட்டால் கனரக தளவாடங்களை நகரத்த முடியாது என்றார்.
பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகள் மற்றும் இதர கனரக பிரங்கிகள் டாங்கிகள் ஆகியவற்றை எல்லைக்கு விரைவாக கொண்டு செல்வதற்கு இந்த பணிகள் இன்றியமையாதது ஆகும்.
சமீபத்தில் எல்லையோரம் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தேச பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் நிலையில் நாட்டின் பாதுகாப்பிற்காக இதனை அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஆனால் தொண்டு நிறுவனத்தின் வழக்கறிஞர் காலின் கான்சால்வேஸ் இந்த திட்டத்தை முற்றிலும் எதிர்ப்பதாக கூறினார்.