
பூஞ்சில் நடைபெற்று வரும் ராணுவ ஆபரேஷனானது இன்று 28ஆவது நாளை எட்டியுள்ளது தொடர்ந்து பயங்கரவாதிகளை ராணுவம் தேடி வருகிறது.
தற்போது ரஜோரி – தானமன்டி இடையிலான தேசிய நெடுஞ்சாலை என்கவுன்டரின் பரப்பளவு அதிகரித்துள்ளதால் முடப்பட்டு காப்லா காட்டு பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த என்கவுன்டர் பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட்டி மற்றும் மேந்தார் காடுகளிலும் ரஜோரி மாவட்டத்தின் தானமன்டி பகுதியிலும் நடைபெற்று வருகிறது.
இதுவரை 2 இடைநிலை அதிகாரிகள் உட்பட 9 ராணுவ வீரர்கள் இந்த ஆபரேஷனில் வீர மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.