
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரித்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் விரைவில் சேவையை துவங்க உள்ளது.
முதலாவது இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் நேற்று பிரதமர் மோடியால் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த இந்திய வானூர்தி தயாரிப்பு திறனில் ஒரு மைல்கல் ஆகும் மேலும் இதன்மூலம் இந்தியாவின் வான் தாக்குதல் திறன்கள் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.